காலக்கவிஞனுக்கு எமது கண்ணீர் வணக்கம்; தமிழீழ விடுதலைப் புலிகள்!

0
270

inkulaapதமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்களின் மறைவிற்கு அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

அவ் அறிக்கையினை இன்குலாப் அவர்களின் குடும்பத்தினரிடம் திரு காசி ஆனந்தன் அவர்களும், அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் செயற்பாட்டாளர் அரண் மயில்வாகனம் அவர்களும் நேரில் சென்று ஆறுதலை தெரிவித்து அறிக்கையினை கையளித்தனர் .

அத்தோடு அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களின் சார்பாக மலர்வளையமும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் இரங்கல் அறிக்கையும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இரங்கல் அறிக்கையும் அவரது குடுத்பத்தினரிடம் கையளித்தனர்.

தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 01.12.2016 அன்று சென்னையில் காலமானார்.

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரைஎன்னும் கிராமத்தில் பிறந்தவர் இவர். சாகுல் அமீது என்பது இவரது இயற்பெயராகும். கவிதை எழுதுதல் மட்டுமன்றி,நாடகத்துறை,சொற்பொழிவு,பத்திரிகைத்துறைஉள்ளிட்டபன்முகத்திறமைகொண்டவர் இன்குலாப்.

தமிழ் மொழி மீது அளவற்றபற்றுக் கொண்டிருந்த அவர் சாதீய ஒடுக்கு முறை, இந்தி மொழித்திணிப்பு என்பவற்றுக்கெதிராகப் போராடியவர். இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளாகி,சிறைவரைசென்றவர்.

எப்போதும் ஒடுக்குமுறைகளுக் கெதிராகவே அவரது எழுத்துக்கள் மிளிர்ந்தன.
தமிழீழத் தேசியத்தலைவரிடத்தும் தமிழீழ மக்களிடத்தும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தகவிஞர் இன்குலாப், இந்திய அமைதிப்படையினர் எங்கள் மக்கள் மீதுதொடுத்த போரை வன்மையாக எதிர்த்துகுரலெழுப்பியவர்.

இக்காலப்பகுதியைவெளிப்படுத்தி,“ஒப்புக்குபோர்த்தியஅமைதித்திரையின் ஓரங்கள் பற்றியெரிகின்றன…. ”என்றபாடலைஎழுதியிருந்தார். தமிழீழவிடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி அவர் எழுதியகவிதைகள் 1990இல், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப்பிரிவினரால் தொகுக்கப்பட்டுநூலாகவெளியிடப்பட்டது. இக் கவிதைகளின் ஊடாகதமிழீழவிடுதலைப்போரட்டத்தின் தேவைபற்றியும்,அதன் நியாயத்தன்மைமற்றும் செல்நெறிபற்றியஅவரதுஆழமானகரிசனைஎமக்குமிகுந்தமனவெழுச்சியைஏற்படுத்தினஎன்பதை இவ் துயரவேளையில் நாம்தோழமையுணர்வுடன் எண்ணிப்பார்க்கின்றோம்.

2006இல் தமிழகஅரசின் இயல்,இசை,நாடகமன்றம் இவருக்குகலைமாமணிவிருதைவழங்கியது. ஈழத்தமிழர் படுகொலையை கண்டுகொள்ளாத அன்றைய தமிழக அரசைகண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதையும் தங்கப்பதக்கத்தையும் திருப்பி அனுப்பியதன்மான உணர்வுகொண்டவர் கவிஞர் இன்குலாப்.அவரதுமறைவுச்செய்திகேட்டுதமிழீழமக்களாகியநாம் பெருந்துயரடைகின்றோம்.

அதேவேளை அந்த உணர்வுக்கவிஞனுக்கு எமது சிரந்தாழ்த்திய வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரின் குடும்பத்தினர்,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமதுஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

dcp74567676767676

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here