கொழும்பு சிலாபம் பிரதான வீதி மற்றும் நீர்கொழும்பு – கல்கந்த தொடரூந்து வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட முச்சக்கர வண்டி, பாரவூர்தி மற்றும் பேருந்து சாரதிகளை அங்கிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
25 ஆயிரம் ரூபா அபராதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முச்சக்கர வண்டி சாரதிகள் நீர்கொழும்பு – கல்கந்த தொடருந்து வீதியை மறித்து இன்று முற்பகல் முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக காவற்துறையினர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பாதையூடான தொடரூந்து போக்குவரத்துக்கள் முற்றாக பாதிக்கப்பட்டன.
எவ்வாறாயினும் , தற்போதைய நிலையில் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் குறித்த பகுதியில் எதிர்ப்பில ்ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது , எதிர்ப்பாளர்களை சிதறடிப்பதற்காக காவற்துறையால் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.