பிரான்ஸ் மாவீரர் நாளில் பேரலையெனத் திரண்ட மக்கள் வெள்ளம்!

0
2828
பிரான்சில் 2016 மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடந்துமுடிந்துள்ளன. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில்  நேற்று (27.11.2016) ஞாயிற்றுக்கிழமை அன்று மிக எழுச்சிகரமாக நடைபெற்றிருந்தன. இதேவேளை வழமைபோன்று பாரிஸ் பன்தன் பகுதியில் அமைந்துள்ள லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் நடுகல்கள் அமைந்துள்ள துயிலும் இல்லத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகிய அதேவேளை, Sarcelles பகுதியில் 12.35 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகின.dscn5480
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்; திரு. ஜோசெப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு. மகேஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்.dscn5507
தொடர்ந்து, கல்லறைவணக்கம் நடைபெறும் பகுதிக்கு முக்கிய பிரமுகர்கள், மாவீரர் பெற்றோர், உரித்துடையோர், அனைவரும் அழைத்துவரப்பட்டனர். அங்கே திரையில் பந்தன் கல்லறைவணக்க நிகழ்வுகள் நேரலையில் காண்பிக்கப்பட்டன. dscn5472
அங்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து, மணி ஒலிக்கப்பட்டது. மாவீரர் சங்கரின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகைச்சுடரினை 1994 ஆம் ஆண்டு பருத்தித்துறைக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி சுதாவின்  தாயார் ஏற்றிவைத்தார்.dscn5555
அடுத்து 1999 ஆம் ஆண்டு வீரச்சாவடைந்த மேஜர் அருணனின் தாயார் மலர் மாலை அணிவித்தார். சமநேரத்தில் துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், அணிவகுத்து மாவீரர்களுக்கு கண்ணீர் காணிக்கையோடு வணக்கம் செலுத்தினர். இக்காட்சி பலமணிநேரம் தொடர்ந்தது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.dscn5566
தமிழர் கலைபாண்பாட்டுக்கழக இசைக்குழுவினரின் தாயக கானங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டியில் சிறப்பாகத் தெரிவான மாணவமாணவிகளின் பேச்சுக்கள், தமிழ்ச்சோலைப் பள்ளி மாணவ மாணவிகளின் எழுச்சி நடனங்கள்;, தாயகப் பாடல், என்பன அரங்கை அலங்கரித்திருந்தன.
நிகழ்வில் ஈழமுரசு வெளியீடாக பசிலனின் இன்னொரு போர்முகம் பால்ராஜ் என்னும் சிறப்பு நூல் வெளியிட்டுவைக்கப்பட்டது. நூலின் பிரதியை ஊடகவியலாளரும் கட்டுரை ஆய்வாளருமான ச.ச.முத்து அவர்கள் பெற்றுக்கொண்டு, குறித்த நூல்;இன்றைய காலகட்டத்திற்கு ஏன் அவசியமானது என்பது பற்றி விளக்கமளித்திருந்தார்.dscn5515
நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் ஐயா அவர்கள் ஆற்றிய சிறப்பு உரையின் காணொளி வடிவம் திரையில் காண்பிக்கப்பட்டது.
நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரின் சிறப்பு நாடகம் அனைவரையும் சிந்திக்கவைப்பதாய் சற்று வித்தியாசமான முறையிலும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.dscn5514
மனித நேயப் பணி தொடர்பான உரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.சுரேஸ்,திரு.நிதர்சன் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
நிகழ்வில் சிறப்புரையை மலேசியாவில் இருந்து வருகை தந்திருந்த மலேசியா பினாங்கு தமிழர் முன்னேற்ற இயக்கத்தின் செயலாளரும் இளைஞர் அமைப்பின் பெகாறுப்பாளருமாகிய திரு. சத்தீஸ் முன்னியாண்டி அவர்கள் தமிழர் போராட்டத்தை அடையாள மீட்பை உலகமயப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தியிருந்தார். அவருடைய உரை இன்றைய காலகட்டத்தின் தேவையாக இருந்ததுடன், மலேசியாவில் தமிழினப் படுகொலைக்கு துணைபோனவர்கள் மீதான எதிர்ப்போராட்டங்களை பல வடிவங்களில் முன்னின்று இவர் நடத்தியிருந்தமை  இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்களின் உரையும் மேடையை அலங்கரிக்கத் தவறவில்லை.
தொடர்ந்து மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டியில் (சித்திரம், பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.dscn5546
நிறைவாக பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக்கழகக் கலைஞர்களால் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு நிறைவடைந்ததும் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.
இம்முறை பாரிசில் வழமைக்கு மாறான பிரச்சாரங்கள் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் மக்கள் அலைஅலையாகத் திரண்டு தமது உணர்வெழுச்சியைக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடருந்து நிலையத்தில் இருந்து நிகழ்வு மண்டபம் வரை விசேட பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. dscn5553-copie

dscn5520dscn5554 dscn5533 dscn5564 dscn5579 dscn5596 dscn5661 dscn5694 dscn5697 dscn5700 dscn5713 dscn5724 dscn5734 dscn5738 dscn5756 dscn5766dscn5771 dscn5774 dscn5787 dscn5794 dscn5795 dscn5797 dscn5800 dscn5809 dscn5820 dscn5826 dscn5837 dscn5842dscn5871 dscn5873dscn5865dscn5875dscn5876 dscn5880 dscn5850
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here