தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ள நிலையில் மன்னாரிலும் தீபமேற்றி வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதுடன் சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களது விடுதலைக்காக உயிர்நீத்த மாவீர்கள் புதைக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலுமில்லம் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவை முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன.
எனினும் தற்போது ஒருசில கல்லறைகள் அங்கு எஞ்சியுள்ள நிலையில் அவற்றை துப்புரவாக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
வவுனியா நகசபையின் முன்னாள் உபதலைவர் எம்.எம்.ரதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.