உயிர்நீத்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை! – சீ.வி.விக்னேஸ்வரன்

0
161

vikkiவிடுதலைப்புலிகளின் போராட்டத்தில் உயிர்நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில்  இடம்பெற்ற வடக்கு தெற்கு உரையாடலின் போது- ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

போரில், உயிரிழந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர் மற்றும் அவரது சகோதரர்கள் அஞ்சலி செலுத்துவது தவறு என கூற முடியாது. மக்கள் தங்களது பிள்ளைகள் உயிரிழந்ததை நினைவுபடுத்தி அஞ்சலி செலுத்தினால் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்துவிடுவார்கள் என்று இவர்களுக்கு பயம் என முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாலியல் பலாத்காரம், பயங்கரவாதம், போதைப்பொருள் பாவனை செயற்பாடுகள், மற்றும் போதைப்பொருள் பாவனைகள் அதிகம் காணப்படுவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் போதைப்பொருள் பாவனையோ, பாலியல் பலாத்காரங்களோ, பயங்கரவாத செயற்பாடுகளோ இடம்பெறவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்து தற்போது 7 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வடக்கில் 5000இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கையில் எவ்வாறு ஆவா குழு போன்ற பிரிவுகள் இயங்குகின்றது.

விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறாத இந்த செயற்பாடுகள் அவர்கள் முற்றாக இல்லாதபின்னர் ஏன் இடம்பெற வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here