வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்றுவருகிறது. தைப்பொங்கல் தினமான வியாழக்கிழமை (15.01.2015 ) மதியம் 2.30 மணிக்கு வல் வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் கண்ணைக் கவரும் வகையில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. இந்தப் பட்டம் விடும் போட்டியைக் காண்பதற்காக பெருமளவிலான் மக்கள் திரண்டிருந்தனர். நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பட்டங்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இப் பட்ட போட்டியை பிரதம விருந்தினராக வருகை தந்த வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 53 பட்டப் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களுடைய வினோதமான பட்டங்களை பறக்கவிட்டனர்.
இதில் 1ம் இடத்தை தாஜ்மாகல் பட்டமும் , 2ம் இடத்தை லாண்ட் மாஸ்ரா் பட்டமும், 3ம் இடத்தை சைநிஸ் றாகன் பட்டமும் தட்டிச் சென்றன. ஏணைய 16 போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது. நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.எஸ்.மீடின். வல்வெட்டித்துறை கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன். மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.