
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரத்தை பாரிசு லாச்சப்பல் பகுதியில் வைத்து வழங்கிக்கொண்டிருந்தபோதே, குறித்த செயற்பாட்டாளர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் நாளை குழப்பும் நோக்குடனேயே இந்தத் தாக்குதல் சம்பவம் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவே காரணம் என குறித்த நபர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பிரெஞ்சு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஊடகப்பிரிவு- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு