பிரான்ஸ் பாரிஸ் மேற்குப் புறநகரான கொலம்பஸ் (Colombes in Hauts-de-Seine) பகுதியில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலத்தில் ஆயுததாரி ஒருவர் ஆயுத முனையில் பொதுமக்களை பயணக் கைத்திகளாக வைத்திருந்தார். குறித்த ஆயுததாரியை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 13 மணியளவில் அஞ்சல் அலுவலத்தில் நுழைந்தார். குறித்த நபர் ஏ.கே47 ரக துப்பாக்கி மற்றும் கைக்குண்டு வைத்திருந்திருந்தார் என செய்திகள் குறிப்பிடுகின்றன. குறித் நபர் ஆயுதத்துடன்அஞ்சல் அலுவலக்தில் நுழைந்த போது அங்கிருந்த ஜவர் அஞ்சல் அவலுகத்தின் பின்புறக் கட்டிடப் பகுதியினால் தப்பிச் சென்றுள்ளனர். இருவரே ஆயுததாரியுடன் சிக்கியதால் அவர்களே பயணக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
பிற்பகல் 14.30 மணியளவில் காவல்துறையினர் உள்நுழைவதற்கு முன்னர் குறித்து ஆயுததாரி சரணடைந்துள்ளார். குறித்த நபர் பயங்கரவாத நடவடிக்கையில் எதிலும் ஈபடவில்லை. எவரும் காயங்களுக்கும் உள்ளாகவில்லை.