யாழ், கல்லூண்டாய் வெளியில் வெட்டப்பட்டு வீதியில் கிடந்த நபர்!

0
452
vaalயாழ், கல்லூண்டாய்வெளி பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், வீதியில்  கிடந்த நபரொருவர் மானிப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
45 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கல்லுண்டாய் வெளியில் நேற்று இரவு 7 மணியளவில் வீதியால் சென்ற நபர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு, தாக்குதலாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். இந் நிலையில் தாக்குதலுக்கு இலக்காகிய நபர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
அதனை வீதியில் சென்றவர்கள் அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார், படுகாயமடைந்த நபரை மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here