விபத்தினை தடுப்பதற்காக திருப்பிய உந்துருளி ஒன்று கம்பங்கள் இரண்டின் இடையே மோதுண்டு விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னால் அமர்ந்துவந்த அவரது மனைவி எவ்வித காயமும் இன்றி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இச் சம்பவம் திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் நெல்லியடி சோதிவீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நோக்கி வந்து கொண்டிருந்த இவர்கள் சந்தைக்கு அருகாமையில் எதிரேவந்த உந்துருளி ஒன்று சடுதியாக திரும்பியபோது அவ் விபத்தினை தடுப்பதற்காக திருப்பிய வேளையிலேய இரண்டு கம்பங்களிற்கிடையே மோதுண்டதாக கூறப்படுகிறது.
இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கந்தசாமி விபுலானந்தம் (வயது 67) என்ற குடும்பஸ்தரே தலைப்பகுதியில் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டநிலையில் மாலை 6.15 மணியளவில் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.