தனது மனைவியையும் இரண்டு பெண் பிள் ளைகளையும் கோரத்தனமாக வாளால் வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை வேளை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கன்னியா கிளிகுஞ்சு மலைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கே. நித்தியா, அவரது மகளான 10 வயதுடைய காயத்திரி மற்றும் 8 வயதுடைய சந்தியா ஆகிய இரு பிள்ளைகளுமே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரும் உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் கண வர் மூவரையும் வெட்டிக்கொலை செய்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் மாமியார் ஆடு மேய்ப்பதற்காக சென்ற நிலையில், இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து உப்புவெளி பொலிஸார் சம்பவ இடத்திறச்குச் சென்றுள்ளனர்.இதன்போது வீட்டு கதவை மூடியவாறு இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிய நிலையில் கையில் வாளை வைத்துக் கொண்டிருந்த கணவரான 35 வயதுடைய ராஜ லஷ்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.