பிரெஞ்சு வாழ் தமிழ் வாக்காளப் பெருமக்களுக்கு!

0
748
tcc logo copy                                                                                                            12.10.2016
                           பிரெஞ்சு வாழ் தமிழ் வாக்காளப் பெருமக்களுக்கு!
சனநாயக உரிமையை பேணுவோம்
ஒவ்வொரு நாட்டினது வலிமை மிகு ஆட்சியையும் வல்லமையையும் தீர்மானிக்கின்ற சக்தியாக திகழ்கின்றவர்கள் அந்த
நாட்டின் குடிமக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஆட்சியாளர்களே ஆகும். சர்வதேசத்தின் பொதுவிதிகளின் படி
ஒவ்வொரு நாடுகளிலும் 18 வயதிற்கு மேற்பட்ட பிரசைகள் தாம் அளிக்கும் தேர்தல்வாக்குகள் மூலமே இதனைத்
தீர்மானிக்கின்றனர். அனைத்து நாடுகளிலும் வாக்காளர்களும் வாக்களிக்கும் உரிமையும் அதிகரித்துக் கொண்டே வரும்
நிலையில் தமக்கு வாக்களிக்கும் உரிமை இருந்தும் அதனை செய்யாது இருக்கின்ற நிலைப்பாட்டை அந்த நாட்டிற்கு
செய்யும் அவமதிப்பாகவும் பொறுப்பற்ற நிலைப்பாடகவுமே அந்தந்த நாட்டின் அரசுகள் எடுத்துக்கொள்கின்றன.
சில நாடுகளில் தேர்தல்களில் வாக்களிப்பு கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வகையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பிரென்சு நாட்டிற்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் பலர்
பிரெஞ்சு நாட்டின் பிரசாவுரிமையை பெற்றிருப்பதுடன் அவர்களின் குழந்தைகளும் பிரெஞ்சு
பிரசைகளாகியுமுள்ளனர். ஆனாலும் இவர்கள் தமக்குரிய சனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை சரிவர
கடைப்பிடிக்கவில்லை என்பது பிரான்சு நாட்டின் அரசியல் கட்சிகள் பலரின் கருத்தும் கணிப்புமாகவுள்ளது.
எதிர் வரும் 2017 பிரெஞ்சு சனாதிபதி தேர்தலானது இன்றைய சர்வதேச அரசியல் சுழ்நிலையில் மிகவும்
காத்திரமான தேர்தலாகவே பார்க்கப்படுகின்றது. இதற்கு வலிமைசேர்க்கும் வகையில் பிரான்சின் ஒவ்வொரு அரசியல்
கட்சிகளும் வாக்களிக்கும் உரிமை கொண்ட இனங்களுடனும்ரூபவ் அமைப்புகளுடனும் தமது உறவை இன்னும் அதிகமாகவே ஏற்படுத்தி
வருகின்றனர். வாக்களிக்கும் உரிமை கொண்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம் கடந்த காலங்களில் எம்மிடம் எந்தவித
எதிர்பார்ப்புமின்றி மனிதநேயத்துடன் எமது துயரத்திலும் துன்பத்திலும் தேவைகளிலும் பங்கு கொண்டு உதவிய
அரசியல் கட்சிகளுக்கு நாம் தொடர்ந்தும் கை கொடுக்க வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளதோடு 2017 ல்
தெரிவாகப்போகும் அரசியல் கட்சிக்கு எமது வாக்கின் பொறுமதியை தெரியப்படுத்தி அரசியல் ரீதியாக
தொடர்ந்தும் எமது மண்ணினதும் மக்களது விடிவிற்கும் எமதினத்தின் நியாயமான உரிமைப்போராட்டத்திற்கு
சர்வதேச ரீதியாக உதவிடவும் குரல் கொடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை முன்வைக்க முடியும். ஈழத்தமிழ் மக்களின்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் பல்வேறு தேவைகளுக்கு மத்தியில் இதுவோர் அவசியமானதாகவே
பார்க்கப்படுகின்றது.
அன்பார்ந்த பிரெஞ்சு வாழ் ஈழத்தமிழ் மக்களே !
பிரெஞ்சுக்குடியுரிமை பெற்ற நீங்கள் அத்துடன் நின்று விடாது உங்கள் வாக்களிக்கும் உரிமையும் செய்ய வேண்டும்
என்று கேட்டுக்கொள்கின்றோம். அதற்காக ஒருமுறை உங்கள் பகுதி மாநகரசபையில் உங்களதும் உங்கள்
பிள்ளைகளிதும் வாக்களிக்கும் உரிமையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.
எதிர்வரும் 2016 டிசெம்பர் 31 ம் திகதி முடிவிற்குள் உங்கள் பதிவுகளை தங்கள் பகுதி மாநகரசபை மேற்கொள்வும்.
ஏற்கனவே இந்த அறிவித்தலை மாநகரசபைகள் தங்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள் ஆனாலும் காலதாமதம்
செய்யாமல் வாக்களிக்கும் உரிமையை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்வதால் நீங்களும் உங்கள் குடும்பமும்
சமூகமும் இனமும் நாடும் வலிமையடைகின்றது என்பதை கவனித்தில் கொள்வோம்.
சில வரலாற்றைப் படிக்கவும் தெரிந்துகொள்ளவும் மறந்தால் நம் தொன்மையை இழப்போம் சொந்த வரலாற்றை
படிக்க மறந்தால், ஒரு வேளை நம் இனத்தையே இழப்போம்.
நன்றி!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here