பேனா முனை எதிர்கொள்ளும் துப்பாக்கிமுனைகள் – கந்தரதன்

0
408

charlie-hebdoதற்போது கடந்து சென்ற 2014 ஆம் ஆண்டானாது சர்வதேசமெங்கும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் மிகுந்த ஆண்டாக அமைந்ததென சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அதாவது கடந்த ஆண்டு எமக்கு விட்டுச் சென்ற நினைவுகளை ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீட்டுப் பார்த்த வேளையில் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் விடுத்திருந்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தது.

அந்த அறிக்கையில், உலக நாடுகளில் பாகிஸ்தான், ஊடகவியலாளர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமைந்த நாடாக அமைந்ததெனவும் இந்த ஆண்டில் பாகிஸ்தானில் மாத்திரம் 14 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள சிரியாவில் 12 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் 118 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதல்கள் இடம்பெறும் நாடுகளுக்குச் செல்லும் ஊடகவியாலளர்கள், எகிப்து போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களினால் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதையும் ஊடகவியலாளரின் சர்வதேச சம்மேளனம் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த அறிக்கை வெளியாகி ஒரு மாதம் கூட கடக்காத நிலையில், 2015 புதிய ஆண்டின் ஆரம்பத்தில் பாரிசில் பத்திரிகை அலுவலகத்தினுள் ஆயுததாரிகள் அத்துமீறி ஊடுருவி பேனாமுனை ஆயுதம் பிடிப்பவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாகத் தாக்கி 12 பேரை பழிதீர்த்துள்ளனர்.
பிரான்ஸ் பாரிசில் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கின்ற நிலையில், எத்தனையோ நாடுகளின் ஊடகவியலாளர்கள் அடைக்கலம் புகுந்து பாரிசில் சுதந்திரமாக வாழுகின்ற நிலையில், இந்த ஊடகவியலாளர்கள் வரலாறாக்கப்பட்டுள்ளனர்.
நாம் எந்த ஆயுதத்தை ஏந்துகின்றோமோ அந்த ஆயுதத்தால்தான் நமக்கு சாவு என்பார்கள். ஆனால், இன்று பேனாவை ஆயுதமாக ஏந்துபவர்களுக்கு துப்பாக்கியால் பதில் சொல்வதென்பது சிந்தித்துக் கூடபார்க்கமுடியாததொன்று.

arp 13

எமது தமிழீழத்திலும், சிறிலங்காவிலும் சிறிலங்கா அரசு மற்றும் அரச அடிவருடிகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களினால், எத்தனையோ ஊடகவியலாளர்களை நாம் பறிகொடுத்துள்ளோம்.
இன்று பிரான்சில் இடம்பெற்ற கொடுமை கண்டபோது, எமது தாயகத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களே எம்கண்முன்னே வந்து போயினர்.
இந்நிலையில், கடந்து சென்ற 2014 ஆம் ஆண்டிலே பல ஊடகவியலாளர்கள் வரலாறாகி இருக்கின்றனர்.
அதாவது, ஈராக்­கி­லுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்கள் அமெ­ரிக்க புகைப்­பட ஊடகவியலாளர் ஜேம்ஸ் போலேவை தலையைத் துண்­டித்துக் கொலை செய்­துள்­ள காட்சி இன்னும் எம் மனக்கண்ணை விட்டு மறையாமல் இருக்கின்றது. மேலும் ஒரு அமெ­ரிக்­க­ரையும் தாங்கள் சிறை பிடித்­தி­ருப்­ப­தா­கவும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்கள் தெரி­வித்­திருந்தனர்.

ஜேம்ஸ் போலேவை ஒப்படைப்பதற்கு ஈராக்கில் இயங்கும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 132 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கப்பமாகக் கோரியுமுள்ளனர்.
அமெ­ரிக்கா உட­ன­டி­யாக ஈராக் விவ­கா­ரத்­தி­லி­ருந்து விலகவேண்டும். மீறி தீவி­ர­மாக ஈடு­பட்டால் இதே­போல மேலும் பல சம்­ப­வங்­களைச் சந்­திக்க நேரிடும் என்றும் கிளர்ச்­சி­யா­ளர்கள் எச்­ச­ரித்­திருந்தனர்.

இது­கு­றித்து ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்கள் வெளி­யிட்­டுள்ள வீடி­யோவில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்­கத்தை ஒடுக்க அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா அறி­வித்­ததை ஒளி­ப­ரப்பும் வித­மாக ஆரம்­பிக்கும் வீடி­யோவின் அடுத்த காட்­சியில், ‘அமெ­ரிக்­காவுக்கு ஒரு தகவல்’ என்றத் தலைப்பு வெளி­யா­கி­றது.
அதில் சிரி­யாவில் நடை­பெறும் உள்­நாட்டு போர் குறித்த செய்­தி­களை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் சேக­ரிக்கச் சென்ற அமெ­ரிக்க ‘குளோபல் போஸ்ட்” பத்திரிகையின் புகைப்­பட நிருபர் ஜேம்ஸ் போலே என்­ப­வரின் தலை துண்­டிக்­கப்­ப­டு­வது போலான காட்­சியை வெளி­யிட்­டிருந்தனர்.
அதே­போல தாங்கள் பிடித்து வைத்­துள்ள இன்­னொரு அமெ­ரிக்கர் உயி­ருடன் இருப்­பதும், சட­ல­மா­வதும் ஈராக்கில் அமெ­ரிக்கா நடந்து கொள்­வதைப் பொறுத்­தது என்றும் கிளர்ச்­சி­யா­ளர்கள் எச்­ச­ரித்­திருந்தனர்.

இந்­நி­லையில் ஐ.எஸ்.ஐ.எஸ். வெளி­யிட்­ட காணொளி பதிவு குறித்து அமெ­ரிக்க அரசு தரப்பு கடும் கண்­டனம் தெரி­வித்­திருந்தது. எனினும் இந்த வீடியோ பதிவு உண்­மை­யா­னதா என்று ஆராய வேண்டி உள்­ள­தாகவும் தெரி­வித்­தது.

இது குறித்து அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் பென் ரோட்ஸ் தெரி­விக்கையில் ‘ஜனா­தி­பதி ஒபாமா, இந்த வீடியோ குறித்து ஆலோ­சித்து வரு­கிறார். ஒரு­வேளை, இந்த வீடியோ உண்­மை­யா­னது எனில், இதற்கு அமெ­ரிக்கா தனது கண்­ட­னத்தைக் கடு­மை­யாகப் பதிவு செய்யும் எனக் கூறியிருந்தார். இத­னி­டையே, குறித்த காணொளியில் இருப்­பது ஜேம்ஸ் போலேதான் என்று அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.

james-foleyஇதேவேளை, ஜேம்ஸ் போலேயின் தாயார் தெரி­விக்கையில், என் மகனைப் போன்­ற­வர்கள் அப்­பா­விகள். அவர்­க­ளுக்கும் அமெ­ரிக்க அரசின் கொள்­கை­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அமெ­ரிக்க அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. அவர்களைத் தயவு செய்து கொல்லாதீர்கள். என் மகனைப் போல வேறு யாரையாவது வைத்திருந்தால் அவர்களை விட்டு விடுங்கள் அவர்கள் பாவம் எனக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது அவருடைய மகனைப்போன்ற ஊடகவியலாளர்களைத்தான் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறே, ஈராக்கில் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுவரும ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினால் கடந்த ஆண்டு மற்றொரு அமெரிக்க ஊடகவியலாளர் சிரச்சேதம் செய்யப்படுவதனைக் காண்பிக்கும் காணொளியினை ஐ.எஸ்.ஐ.எஸ். வெளியிட்டுள்ளது.
31 வயதுடைய அமெரிக்க ஊடகவியலாளரான ஸ்ரீவன் சொட்லொப்பே இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளார். 2013 இல் சிரியாவில் வைத்து சொட்லொப் கடத்தப்பட்டிருந்தார். இந்த காணொளியின் இறுதியிலேயே அவர் காட்டப்படுகின்றார்.

ஊடகவியலாளர் ஜேம்ஸ் போலே சிரச்சேதம் செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் வெளியான இந்த காணொளியில் பிரிட்டிஷ் பணயக் கைதி ஒருவரை கொல்லப்போவதாகவும் தீவிரவாதி ஒருவர் அச்சுறுத்தியிருந்தார்.

இக்காணொளி தொடர்பாக சொட்லொப்பின் குடும்பத்தினர் அறிந்துள்ளதாகவும் தாம் இதனால் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஊடகவியலாளர் ஜேம்ஸ் போலேயின் மரணத்தின் பின்னர் தனது மகனைப் பாதுகாப்பாக விடுதலை செய்யுமாறு சொட்லொப்பின் தாயார் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரிடம் கோரியிருந்தார். காணொளி தொடர்பாகவும் அது சம்பந்தமான அறிக்கைகள் தொடர்பாகவும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பல தடவைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன. அமெரிக்க இராஜதந்திரிகளையும் அலுவலகங்களையும் பாதுகாப்பதற்கு ஈராக்கில் 300 மேலதிக அமெரிக்க துருப்புகளை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி ஒபாமா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ‘அமெரிக்காவுக்கான இரண்டாவது செய்தி” எனத் தலைப்பிட்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோ இரண்டரை நிமிடத்தைக் கொண்டதுடன், பாலைவனம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செம்மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள முகமூடி மனிதர் இந்த காணொளியில் காணப்படுகின்றார். ‘வரிசெலுத்தும் மக்களின் பலமில்லியன் பெறுமதியான அமெரிக்க டொலர்களை நீங்கள் செலவிட்டுள்ளீர்கள். இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் பல்லாயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் பலியாகியுள்ளனர். இப்போரை நடத்துவதில் மக்களின் ஆர்வம் எங்கே? என அந்த காணொளியில் சொட்லொப் ஒரு செய்தியினை விடுத்துள்ளார். அதேவேளை முன்னர் ஜேம்ஸ் போலேயை சிரச்சேதம் செய்த வீடியோவில் தோன்றிய அதே மனிதர் இந்த வீடியோவிலும் தோன்றுவதாக கூறப்பட்டது. இரு காணொளிகளிலும் முகமூடியணிந்த நபரின் குரல் ஒரேமாதிரியான ஒலியினைக் கொண்டிருந்தது.loork somars

‘நான் மீண்டும் வந்துள்ளேன் ஒபாமா.ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான உங்களது கொடூரமான வெளிநாட்டு கொள்கையே காரணம். பலமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் நீங்கள் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லையென கூறுகின்றோம். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியிலுள்ள நாடுகளுக்கும் எமது எச்சரிக்கைகள். எமது மக்களை தனிமையாக வாழ்வதற்கு அனுமதியுங்கள்” என முகமூடி மனிதர் எச்சரித்திருந்தார். தம்மிடம் உள்ள பிரிட்டிஷ் பணயக் கைதியும் விரைவில் கொல்லப்படுவார் என்ற எச்சரிக்கையுடன் இந்தக் காணொளி நிறைவடைகின்றது.

இந்நிலையில், அல்கைதா அமைப்பினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யேமன் இராணுவம் மற்றும் அமெரிக்க படையினர் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் லூக் சோமர்ஸ் கொல்லப்பட்டுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்திருந்தார்.
அல்கைதா அமைப்பின் யேமன் நாட்டுப் பிரிவான அரேபிய தீபகற்பத்துக்கான அல்கைதா அமைப்பு கடந்த 2013 ஆம்ஆண்டு அமெரிக்க புகைப்படப் பிடிப்பாளரான லூக் சோமர்ஸ் கடத்தப்பட்டிருந்தார்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் சோமர்சை கோலை செய்யப்பொவதாக அல்கைதா அமைப்பினர் அமெரிக்காவுக்கு விடுத்த மூன்று காலக்கெடு முடிவடைந்ததால் சோமர்ஸ் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறு கடந்த ஆண்டில் பல் ஊடகவியலாளர்கள் பரிதாபகரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதேவேளை கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுப் பகுதியில் பாரிசில் இருந்து வெளியாகிவந்த ‘ஈழமுரசு” வார இதழும் அதனுடன் இயங்கும் இணையங்களும் ஆயுததாரிகளின் கோலைமிரட்டல் காரணமாக நிறுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் ஆரம்பம் பிரான்ஸ் நாட்டின் ஊடகவியலாளர்களை பலிகொண்டுள்ளது.
பிரான்சில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைக் கண்டித்து பிரான்சு வாழ் மக்களோடு ஓன்றிணைந்து நாமும் எமது வலிமையான கண்டனங்களைத் தெரிவிப்போம் என் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கேட்டுள்ளது.
‘சார்லி எப்டோ’ பத்திரிகைக் காரியாலயத்தின் மீது ஆயுததாரிகள் ஈவிரக்க முறையில் 08-01-2015, வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில,; பிரான்சின் புகழ்பெற்ற மிகச்சிறந்த ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டது, பிரான்சு வாழ் மக்களையும், உலக மக்களையும் பேரதிர்ச்சிக்கும ; பெரும ; துயருக்கும் உள்ளாக்கியுள்ளது.

stevan sotloff
மக்கள் உரிமைகளின் பாதுகாவலரான பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பது கருத்துச் சுதந்திரத்தையே சாகடிக்கச்; செய்யும் அச்சுறுத்தலாகவே நாம் கருதுகின்றோம். எனவே இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரதும் தலையாய கடமை ஆகும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மகத்தான மனிதவுரிமைகளை உலகுக்கு வழங்கி, மக்கள் உரிமைகளுக்கு முன்னோடியாக விளங்கும் பிரான்சு மண்ணில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உலக மக்களின் அடிப்படை உரிமைகளைப் பயங்கரவாதத்தால் பறிக்கும் செயல்!
எனவே இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக, அனைத்து மக்களும் ஒற்றுமையாகக் கைகோர்த்து எமது வலிமையான கண்டனங்ளைத் தெரிவிப்போம்.

அரசியல் அகதியாக உயிர்பிழைக்க ஓடோடி வந்தபோது, நம்மை வரவேற்று வாழ் வழித்த பிரான்சு தேசத்தின் துயரில் பங்குகொள்வது. நன்றியுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமையாகும் எனவும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறியது போல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டியது எம் ஒவ்வொருவரின் கடமையாகும். பேனாமுனையைத் துப்பாக்கி முனைதான் சந்திக்குமா? சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

– நன்றி : ஈழநாடு (14.01.2015)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here