
வாகனத்தில் வந்த ஐந்து பேர் வீட்டில் தந்தையுடன் இருந்த குறித்த இளம் பெண்ணின் தந்தையை மிரட்டி, பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளனர்.
ஒரு வாரகாலத்திற்கு முன்னர் தனது மகளை திருமணம்செய்துகொடுக்குமாறு கடத்திச் சென்ற இளைஞர் நேரடியாக வீட்டிற்கு வந்து கேட்டதாகவும், எனினும் தாங்கள் மறுத்துவிட்ட நிலையிலேயே நேற்றைய தினம் மேலும் நான்கு பேரை அழைத்து வந்து கடத்திச் சென்றதாகவும் இளம் பெண்ணின் தந்தை பொலி ஸாரிடம் முறையிட்டுள்ளார்.
எனினும் கடத்திச்செல்லப்பட்ட இளம் பெண் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பிரிவு, வட்டுக்கோட்டைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறியது.