கொழும்பு புதுக்கடையில் பள்ளிவாசலுக்குள் வைத்து இளைஞன் வெட்டிக்கொலை!

0
207

content_கொழும்பு, வாழைத்­தோட்டம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புதுக்­கடை, அப்துல் ஹமீத் வீதியில் உள்ள பள்­ளி­வா­ச­லுக்குள் இளைஞர் ஒருவர் கூரிய ஆயு­தங்­களால் வெட்டிப் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

இச்­சம்­பவம் நேற்று அதி­காலை 4.15 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ளது. குறித்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 27 வய­தான மொஹம்மட் ரவூப் மொஹம்மட் ருஷ்கி என்ற

இளை­ஞரே இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்­களை தேடிய விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் வாழைத்­தோட்டம் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

நேற்று அதி­காலை 4.20 மணி­ய­ளவில் வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­னெத்­திக்கு தொலை­பேசி அழைப்­பொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் புதுக்­கடை பள்­ளி­வா­சலில் ஏதோ பிரச்­சினை ஒன்று ஏற்­பட்­டுள்­ள­தாக தகவல் தெரி­விக்­கப்பட்­டுள்­ளது.

இதனை அடுத்து வாழைத்­தோட்டம் பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரி­வுக்கு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சூரி­ய­பண்­டார தலை­மையில் பொலிஸார் குறிப்­பிட்ட இடத்­துக்கு சென்­றுள்­ளது.

இதன் போது புதுக்­கடை பள்­ளி­வாசல் அருகே மக்கள் கூடி­யி­ருந்­துள்­ள­துடன் தாக்­கு­த­லுக்கு உள்­ளான நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாக அவர்கள் பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­துள்­ளனர்.

பள்­ளி­வாசல் முன்னாள் உள்ள வீதி­யிலும் பள்­ளி­வா­ச­லுக்­குள்ளும் இரத்­தக்­க­றைகள் காணப்­ப­டவே அப்­பி­ர­தே­சத்தை குற்றப் பிர­தே­ச­மாக பிர­க­டனம் செய்த பொலிஸார் மத்­திய கொழும்பு பொலிஸ் தடய­வியல் நிபு­ணர்­களை அழைத்து தட­யங்­களை சேக­ரிக்­க­லா­யினர்.

அத்­துடன் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் அப்துல் ஹமீட் வீதியை சேர்ந்த மொஹம்மட் ருஷ்கி என்­ப­வரே வெட்­டுக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­மை­யையும், அவர் தேசிய வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ள­தையும் உறுதி செய்­த­துடன் தாக்­கு­த­லுக்கு குழு­வொன்று வருகை தந்­துள்­ள­மையும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே வீதியில் நின்­றி­ருந்த மொஹம்மட் ருஷ்­கியை கூரிய ஆயு­தங்­களைக் கொண்ட குழு­வொன்று தாக்­கி­யுள்­ள­மையும் தாக்­கு­தலில் இருந்து தப்­பித்துக் கொள்ள ருஷ்கி பள்­ளி­வா­ச­லுக்குள் ஓடி­யுள்­ள­மையும் இதன் போது துரத்திச் சென்ற தாக்­குதல் தாரிகள் பள்­ளி­வா­சலின் உள்ளே வைத்து அவரை சர­மா­ரி­யாக தாக்­கி­யுள்­ள­மையும் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த ருஷ்­கியை பிர­தேச வாசிகள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

இந் நிலையில் அதி­காலை 5.05 மணிக்கு வாழைத்­தோட்டம் பொலி­ஸா­ருக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்ள கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையின் பொலிஸ் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ருஷ்கி இறந்­து­விட்­ட­தாக அறி­வித்­துள்ளார்.

இந் நிலையில் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­பித்­துள்ள வாழைத்­தோட்டம் பொலிஸார் சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்­கான விசா­ர­ணை­களை தொடர்­கின்­றனர்.

இந் நிலையில் சந்­தேக நபர்­களை கண்­டு­பி­டிக்க குற்றம் இடம்­பெற்ற பிர­தே­சத்தை அண்­மித்த பகு­தி­களில் உள்ள சீ.சீ.ரீ.வீ.கம­ராக்­களை பொலிஸார் சோதனை செய்து வரு­கின்­றனர்.

கொழும்­புக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட, கொழும்பு மத்திய பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த சிறிவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயனெத்தி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சூரியபண்டார ஆகியோரின் கீழ் விஷேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here