கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து இளம் பெண் உயிரிழந்தார்!

0
367
well 444ddதண்ணீர் அள்ளச் சென்ற இளம் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்று  காலை 7 மணியளவில் சங்கானை பட்டனசபை வீதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் அதேயிடத்தைச் சேர்ந்த யோகராசா நிஷா (வயது 19) என்ற இளம் பெண்ணே உயிழந்தவராவார்.
கிணற்றுக்குள் வீழ்ந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கெனவே உயிழந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here