பிரான்சில் நினைவுகொள்ளப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள்! (காணொளி)

0
1120

பிரான்சில் கடந்த 08.11.2012 அன்று சிறிலங்கா கைக்கூலிகளினால் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் இன்று பாரிசில் உணர்வுபூர்வமாக நினைவுகொள்ளப்பட்டன.

paruthi-2paruthi-3paruthi-4paruthi-5paruthi-6dscn5129
காலை 9.00 மணிக்கு கேணல் பருதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் சுடர்ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு  அகவணக்கம் செலுத்தப்பட்டது.
முதலில் கேணல் பருதி அவர்களின் பெற்றோர், புதல்வி, சகோதரர் உள்ளிட்டோர்  சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

dscn5120 dscn5122 dscn5123  dscn5132 dscn5134 dscn5142 dscn5149 dscn5154
தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது, நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
தொடர்ந்து முற்பகல் 11.00 மணியளவில் பந்தன் பகுதியில் கேணல் பருதி அவர்களின் கல்லறை அமைந்துள்ள இடத்தில் கல்லறை வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு.சுரேஸ் அவர்கள் ஏற்றினார். கேணல் பருதி அவர்களுக்கான ஈகைச்சுடரை அவரது பெற்றோர் ஏற்றிவைக்க, மலர்மாலையை கேணல் பருதி அவர்களின் புதல்வியும் சகோதரனும் அணிவித்தனர். தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலித்தபோது அனைவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் கேணல் பருதி அவர்களின் கல்லறைக்கு சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது, நினைவுரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சத்தியதாசன் அவர்களே ஆற்றியிருந்தார்.

dscn5177 dscn5183 dscn5202 dscn5196 dscn5189 dscn5203 dscn5205 dscn5214 dscn5219
அவர் தனது உரையில் கேணல் பருதி அவர்களின் காலத்தில் இடம்பெற்ற செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்ததுடன், நாம் அவரின் வழியை பின்பற்றி உறுதியாகச் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் உறுதி எடுக்கப்பட்டது. அனைவரும் கேணல் பருதி அவர்களுடைய கல்லறை முன் தமது கைகளை நீட்டி உறுதி எடுத்தனர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here