பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சட்ட மூலத்தினால் இலங்கையில் படைத்தரப்பினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் உட்பட கொடூ ரங்கள் மேலும் மோசமடையும் என அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் காவல்துறை உட்பட படைத்தரப்பினர் சித்தி ரவதைகள் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டுவரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டம் அவர்களுக்கு மேலும் அதிகாரமளிப்பதாக அமையும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்கா ணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வெளி யிட்டுள்ள புதிய அறிக்கையில், இலங்கை அரசாங்கம் படை கட்டமைப்புக்களில் உண்மையான மறு சீரமைப்புக்களை மேற்கொள்வது என்றால், முதலில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்தி ரவதைகள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து யாழ் பல்கலை க்கழக மாணவர்கள் இருவரான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் இதற்கு சிறந்த உதாரணம் என்றும் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பொதுமக்கள் காவல்துறையினரின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்ததால் அந்த சம்பவ த்தை மூடிமறைக்க இலங்கை காவல்துறையினரால் முடியாது போய் விட்டதாகவும்அவர் குறிப்பிட்டு ள்ளார்.
காவல்துறையில் இடம்பெறும் மோசமான சித்திரவதைகள் மற்றும் படுகொலைகள் விடயத்தில் அரச தரப்பினரால் உறுதியான வாக்குறுதியை வழங்க முடியாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பக த்தின் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவிக்கின்றார்.
காவல்துறைக்கு சட்டவிரோத கைதுகள், சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் ஆகிய சம்பவங்கள் வழமையான நிகழ்வுகளாகியுள்ளமை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பிரட் அடம்ஸ், அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய காவல்துறையினரை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு யூன் மாதம் கொழும்பு கண்டி வீதியில் வைத்து இந்திய ஜயசிங்க என்ற இளைஞர் பொலி சாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், 2014 ஆம் ஆண்டு மே மாதம் சந்துன் மாலிங்க என்ற இளை ஞன் படு கொலை சம்பவம், 2015 மார்ச் மாதம் தெல்கொட பகுதியில் வைத்து பொலிசாரால்கைது செய்ய ப்பட்ட இளைஞர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை ஆகிய சம்பவங்களும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகள் என பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அராங்கம் உண்மையில் பாதுகாப்புக் கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாயின், காவல்துறை யினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோதப் படுகொலைகளைத் தடுப்பது குறி த்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணி ப்பாளர் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதனை யாழ் பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கஜன் ஆகியோ ரின் படுகொலைகளிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பிரட் அடம்ஸ், காவல்துறையினரு க்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சட்ட மூலத்தை இலங்கை அர சாங்கம் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.