வவுனியாவில் நேற்று கிணற்றிற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் மகனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியினை சேர்ந்த தாயும் அவரது மூன்று வயதான மகனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்கள் என அறியப்படுகிறது
நேற்று கணவனுடன் எற்பட்ட குடும்பத்தகறாறு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறிய தாய் மற்றும் தனது மூன்று வயது மகனுடன் லீசிங் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதற்கு செல்வதாக கூறி; சென்றுள்ளார். எனினும் மாலை வரை வீடு திரும்பாததையடுத்து இன்று காலை அயலிலுள்ள கிணற்றுக்குள் சென்று பார்த்தபோது தாய் மற்றும் மூன்று வயது மகன் இருவரும் சடலமாக இருப்பது தெரியவிந்துள்ளது.