யாழ்ப்பாணம் வலிகாமம் மக்கள் இடம்பெயர்ந்து ஒக்ரோபர் 30 ஆம் திகதி 24 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1995 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி வலிகாமம் மக்கள் தென்மராட்சிக்குள் இரவோடு இரவாக தஞ்சமடைந்தனர்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மூலம் இராணுவம் வலிகாமம் மண்ணை தனது பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவர சுமார் 5 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்.
சொந்த வீடுகளை இழந்து, உடமைகளை பறிகொடுத்து இடம்பெயரும்போது தமது உறவுகளையும் இழந்து தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறிய நாள் இன்றாகும்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் நிறைவடைந்து படிப்படியாக மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் வலிகாமம் மக்கள் இதுவரை முற்றுமுழுதாக குடியேற்றப்படாத நிலையில் நலன்புரி நிலையங்களிலேயே அவர்களது அவல வாழ்வு தொடர்கிறது.