யாழில் சிறிலங்கா படைகளினால் கடந்த 20.10.2016 அன்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வேண்டி பிரான்சில் பன்னாட்டு அரங்கில் நாளை (29.10.2016) சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து நீதிகோருவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.