தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவும், நீதி வேண்டியும், தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் 26.10.2016 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணியில் இருந்து 17.00 மணிவரை பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் ஐரோப்பியப் பாராளுமன்றம் முன் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 20.10.2016 அன்று யாழ்ப்பாணத்தில் சிங்கள பேரினவாத அரச படைகளினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் சுலக்சன் சுகந்தராஜா, கஜன் நடராஜா, ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் , நீதி வேண்டியும், சிங்கள பேரினவாத அரச படைகளைத் தமிழீழ நிலப்பரப்பிலிருந்து உடனடியாக வெளியேற்றக் கோரியும், 68 வருடங்களாகத் தொடரும் தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழ உணர்வாளர்கள் கலந்துகொண்டு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்திடம் எமது கோரிக்கைகள் அடங்கிய மனு கையளிக்கப்பட்டது. இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற எழுச்சி முழக்கத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.
Home
சிறப்பு செய்திகள் யாழ் பல்கலை மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து பிரான்சு ஸ்ரார்ஸ்பேர்க் நகரில் கவனயீர்ப்பு போராட்டம்!