கிளிநொச்சியில் பொதுமக்கள் -பொலிஸார் மோதல், வைத்தியசாலை முன்பாக பெரும் பதற்றம்!

0
270

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டநிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இட ம்பெற்று வந்தது  இந்தநிலையில்  குறித்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக வதந்தி பரவியது
 
இதனையடுத்து கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொலி ஸாரும் விசேட அதிரடிப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டதை அடுத்து அங்கு பத ற்ற நிலைமை உருவாகியது.

இதனையடுத்து  பொலிசாருக்கும், பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் தற்போது மோதலாக மாறியுள்ளது. இதனால் கிளிநொச்சி நகரில் பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
அங்கு வந்த கலகம் அடக்கும் பொலிசார் உட்பட படையினர் மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணித்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இந்தநிலையில் பொலிசார் மீது மக்கள் கற்களையும், கையில் கிடைத்த அனைத்தையும் கொண்டு தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இதேவேளை  வீதியின் நடுவே டயர்களை கொளுத்தி பொது மக்கள் படையினருக்கு எதிராக போராட்டங்களை தொடர்கின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதுடன் அதிகளவான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
14801114_786298561509228_7062127_n

14813597_786286681510416_1635076966_n

1477405394_download-copie

14825552_786286648177086_1270869107_n-copie

14874907_786298558175895_406930026_n-copie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here