அதிகரித்த இராணுவ பிரசன்னமே பிரச்சினைகளுக்கு காரணம்:ஐ.நா. அதிகாரி தெரிவிப்பு!

0
375

.unnamedவடக்கு, கிழக்கில் நீடிக்கும் அதிகரித்த இராணுவ பிரச்சனம் அந்த சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வித்திட்டுள்ளதாக  சிறுபான்மையின சமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியா தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு கடந்த பத்தாம் திகதி விஜயம் செய்திருந்த ஐ.நா அதிகாரி நாடியா, தனது பயணத்தின் இறுதிநாளான இன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, தற்போதைய தேசிய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் போது வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
பல்வேறு சமூகங்களின் ஒத்துழைப்புடன் 2015 ஆம் ஆண்டு தேசிய கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டது. 
 
நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றம் தொடர்பான புதிய நம்பிக்கை இதன் மூலம் ஏற்பட்டி ருந்தது. 
 
2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை  அனுசரணையில் மனித உரி மைகள், பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருந்தது. 
 
கடந்த கால சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமை, உண்மையை கண்டறிவதற்கான உரிமை, நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கான உரிமை, மற்றும் நட்டஈடு போன்ற நான்கு அடிப்படை விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக குறித்த தீர்மானத்தில்  உறுதியளிக்கப்பட்டு ள்ளது. 
 
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், நல்லிணக்க பொறி முறை களை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களுடன் இணை ந்து முன்னோக்கி செல்வதில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கும். 
 
ஒவ்வொரு தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறை, அனைத்து சமூகங்களின் கருத்து க்கள் மற்றும் அபிலாஷைகளை உள்ளடக்கிய நம்பிக்கையை ஈர்க்கும் பொறி முறையின் உருவாக்கம் மற்றும் நீண்டகாலமாக காத்திருக்கும் இந்த பொறிமுறைகள் தமக்கானது என்ற உரித்துடன் அணுகுதல் போன்றவற்றுக்கு குறித்த சுயாதீன நிறுவ னங்களை அமைப்பது அத்தியாவசியமானது.
 
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினால்,  இராணுவத்தினர் ஆக்கிரமிப்பு படையாகவே நோக்கப்படுவதாகவும் தெரிவித்த ஐ.நா அதிகாரி, அதேபோல் தமிழர்களையும் இராணுவம் இன்னமும் ஆயுததாரிகளாகவே தொடர்ந்தும் அடையாளப்படுத்துகின்றது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொட ர்பில் முரண்பாடுகள் காணப்படுகிறது
 
பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுகின்றமை, சமமற்ற முறையில் தமிழ் சமூகத்தை பாதித்துள்ளது. உரிய நடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றி தடுத்து வைக்கும் வகையிலான குறித்த சட்டம் தொடர்பில் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இந்த சட்டத்தின் கீழுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் முக்கியமானதும் கரிசனையுள்ளதுமான ஒன்றாகும். 

இது நல்லிணக்க செயற்பாடுகளில் அரசாங்கத்தின் கடப்பாடாக காணப்படுகின்றது. பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வது மிகவும் முக்கியமானது என்பதை அடிக்கோடிட்டுகாட்ட விரும்புகின்றேன் என அவர் ஆமலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here