பிரான்ஸில் குடியேறிகள் மையம் தொடர்பான திட்டம் ஒன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சிறிய நகரம் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பேரணியாக சென்றுள்ளனர்.
பிரான்ஸில் வடக்கு துறைமுகமான காலேவில் உள்ள தற்காலிக வன குடியேறிகள் முகாமை மூட அந்நாட்டு அரசாங்கம் விரும்புகிறது.
மேலும், இந்த குடியேறிகளை நாடு முழுக்க குடியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆனால், தெற்கு நகரமான பியெர்ரெஃப்யூ டு வாரில் உள்ள போராட்டக்கார்ர்கள், தங்களுடைய சமூகம் சிறியது என்றும், ஒரே நேரத்தில் கிராமப்புற பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடியேறிகளை தங்க வைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினமே மற்றொரு போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது