பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ரயிலில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்பு தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மாகாண தலைநகரான குவெட்டாவிலிருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற விரைவு தொடருந்தை குறிவைத்து இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் ஒருங்கிணைக்கப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முதல் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 20 நிமிடங்களுக்கு பிறகு அடுத்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த வெடிகுண்டுகள் தொடருந்து தண்டவாளத்தில் வைக்கப்பட்டனவா அல்லது தொடருந்துக்குள் வைக்கப்பட்டனவா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்த தாக்குதலில் குறைந்தது 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.