கிளிநொச்சி – இரணைமடுகுளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இரவு பகலாக இரணைமடுகுளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் இப் பணியில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த கனகராசா கோபிநாத் (வயது 22) என்பவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.