எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. – தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள்.
14.01.2015.
எங்கள் அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்;களே! உலகத்தமிழ் மக்களே தமிழர் திருநாளாம் புத்தாண்டு தைத் திருநாளில் புரட்சிகரமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கைத்தீவிலே தமிழர்களின் தாயகப்பிரதேசமான வடக்கு, கிழக்கு தமிழீழ தாயகம் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டு சனநாயகம், சட்டம், ஒழுங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் தினம் தினம் சீரழிக்கப்பட்ட குடும்ப ஆட்சியும், வெளித்தெரியாத சர்வாதிகார ஆட்சியை நடாத்திய மகிந்த அரசானது நடைபெற்று முடிந்த தேர்தலில் குடைசாய்ந்ததும், அதற்கு காரணமாகதத் தமிழர்களினதும், முஸ்லீம்களினதும் வாக்குகள் அமைந்திருக்கின்றது என்பதையும் எவராலும் மறுக்க முடியாது. 2009 ல் மாபெரும் தமிழின அழிப்பை நடாத்திவிட்டு மிகுதியாக இருந்த தமிழ் மக்களையும் தொடர்ந்து துன்புறுத்திய கொடுங்கோலனின் ஆட்சியில் நம்பிக்கையற்று கொடுத்த கோபத்தின் தீர்ப்பே இதுவாகும். இதே நேரத்தில் ஆட்சியை ஏற்றுள்ள புதிய அரசும் தமிழீழ மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு சமஉரிமை கொண்ட நிம்மதியானதொரு வாழ்வை தமிழர்களுக்கு தந்து ஆட்சி நடாத்தும் என்பதுவும் கேள்விக்குரியான தொன்றாகும். கடந்த 65 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்த இந்த இரண்டு ஆட்சியாளர்களும் காலத்துக்காலம் தமிழின அழிப்பை மேற்கொண்டு அதன்பால் ஆட்சி செய்தவர்கள் என்பதும் இவர்களின் பௌத்த தேசியவாதக் கொள்கையில் எந்தவித மனமாற்றங்கள் இருக்குமா ? ஏற்படுமா ? என்பது கேள்விக்குறியே. இதுவே இலங்கையின் தொடர்ச்சியான வரலாறாகும். நடந்து முடிந்த சிறீலங்கா நாட்டின் தேர்தலில் பௌத்த தேசிய பேரினவாதிகளின் வாக்குகள் தான் இரண்டாக பிளவுபட்டு போய்யுள்ளது என்பதே யதார்த்தமான உண்மையாகும். இனியும் இலங்கைத்தீவில் சனநாயகம் பேணப்படும் என்பதும், ஆறு தசாப்தங்களுக்கு மேலாக துன்பத்தையும் உயிர் இழப்பையும், பாலியல் வன்கொடுமைகளையும், படுபாதக செயல்களுக்கு துணைபோகவும், திட்டமிட்ட நிலஆக்கிரமிப்பினையும், இராணுவ ஆட்சியையும் சந்தித்துக்கொண்டு, இனியில்லை என்ற துன்பத்தின் விளிம்பில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள ஏகாதிபத்திய பேரினவாத அரசிடம் காருண்யத்தையும், மனிதநேயத்தையும், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையையும் தருவார்கள் என்று இனியும் எதிர்பார்ப்பதானது நாமே எமக்கு புதைகுழி தோண்டிக்கொள்வது போலாகும். தமிழீழ தாயகத்திலும், புலத்தில் தமிழீழ மக்களும், தாய்த்தமிழக மக்களின் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தணிப்பதற்காக 2009 ல் கொத்துக்கொத்தாக எமது மக்கள் ஆயிரக்கணக்காக கொன்றொழிக்க தெரிந்தோ தெரியாமலோ துணைபோன நாடுகளின் ஆலோசனைகளுடன், அண்டை அயல் நாடுகளின் துணையுடனும் ஒப்புக்கு மீண்டும் ஓர் விசாரணைக் குழுவினை நியமித்து தனக்கு எதிராக செயற்பட்டவர்களையும், தமக்கு ஒத்துழைக்காதவர்களையும் பழிவாங்கும் வகையில் குற்றமிழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு வராது இது உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி உள்நாட்டுக்குள்ளேயே தண்டனை வழங்கிவிட்டோம் என்ற பரப்புரையையே சிறீலங்கா அரசு செய்யவுள்ளது என்பதே உண்ணையாக நடைபெறப்போகும் செயற்பாடக அமையப்போகின்றது. இதுவே தமிழர்களுக்கு தேவை அதை நிறைவேற்றியுள்ளோம் என்று சர்வதேசத்திற்கு புதிய ஆட்சியாளர்கள் கணக்குக் கொடுக்க முடியும். ஆனால் தமிழீழ மக்களாகிய நாம் கொண்ட இலட்சியத்தில் சிறிதேனும் பின் வாங்க மாட்டோம் என்பதை உரத்துக்கூறக் கடமைப்பட்டிpருக்கின்றோம். இது எமக்கு மாவீரர்களும் அவர்களின் கேடையமாக இருந்து உயிர் தந்த தமிழீழ மக்கள் தந்துள்ள வரலாற்றுக்கடமையும் கூட அதனைத் சர்வதேசத்திற்கு தொடர்ந்து கொண்டு சொல்ல வேண்டியதொரு களமே எதிர் வரும் மார்ச் 16ம் திகதி nஐனீவா ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் செயலகத்திற்கு முன்பாக முருகதாசு திடலில் நடைபெறவுள்ள நீதிக்கான மாபெரும் பேரணியும், ஒன்றுகூடலுமாகும்.
அன்பான தமிழீழ மக்களே!
2015 புதிய ஆண்டில் இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் தான் ஏற்பட்டிருக்கின்றது. ஆட்சியாளர்கள் மாறவில்லை என்பதை ஒவ்வொரு தமிழர்கள் நீங்கள் அறிவீர்கள். வரும் 2015ம் ஆண்டு எமது தேசியம் நோக்கிய சனநாயக அரசியல் ரீதியான போராட்டம் இன்னும் இன்னும் வீரியம் பெறவேண்டும். ஒவ்வொரு போராட்டங்களும் தமிழீழ மக்களின் அபிலாசைகளை வீரியத்துடன், ஆணித்தரமாகவும், எழுச்சி பூர்வமாக சர்வதேசத்திற்கு சொல்ல வேண்டும். சிங்கள பேரினவாத அரசுகளின் பிடியில் சிக்குண்டு போயுள்ள எமது மக்களின் வாழ்வாதரத்திற்கு தொடர்ந்து உதவிக்கரம் கொடுக்க வேண்டும். அடிமைத்தனத்திற்குள் வாய்பேச முடியாத நிலையில் வாழும் எமது மக்களை மீட்க வேண்டும்.
எமது தாயகம் தேசியம் தன்னாட்சி எங்கள் கைகளில் வரும் போதுதான் இவ்வாறான அடிமைத்தனமும், உயிர் இழப்பும்,துன்புறுத்தலும் நிறைவுக்கு வரும் களத்திலும், புலத்திலும் தமிழ்மக்களின் எழுச்சியும், முகிழ்ச்சியுமே ஒரு நிம்மதியான விடிவை தமிழர்கள் எமக்கு பெற்றுத் தரும் அதற்காக தொடர்ந்து அனைத்து வழிகளிலும் தொடர்ந்து தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து போராடுவோம் என்று 2015 புதுவருடத்தில் புது ரத்தம் பாச்சி புறப்படுவோம். நன்றி.
‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
CCTF 260, Rue du Faubourg St Martin 75010 Paris FRANCE Tel. 0033 1 43 15 04 21