மிதி உந்தும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் கஸ்தூரியார் வீதி பெற்றோல் நிரப்பு நிலையம் அரு காமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் மிதி உந்தில் பயணித்த யாழ். மடத்தடி தண்ணீர் தொட்டியடியை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 69) என்பவரே உயிரிழந்தவராவார்.6.00 மணிக்கு விபத்துக்குள்ளான நபர் 6.50 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸில் முறையிட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் டிப்பர் வாகனச் சாரதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் அண்மைக் காலங்களாக வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.