மக்கள் தமது கருத்தை வெளிப்படுத்துவது தெற்கில் இனவாதமாக சித்தரிக்கப்படுகிறது: சீ.வி.விக்னேஸ்வரன்

0
230
vikkiமக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
நீண்டகாலமாகவே அதிகாரங்கள் மேலிருந்து கீழாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. மக்கள் தங்களுடைய கருத்துக்களை, அபிலாசைகளை வெளிப்படுத்த முடியாதவர்களாகவே இருந்து வந்தனர்.அரசியலும் அரசாங்க நிர்வாகமும் மக்கள் மீது ஆணை யிடுபவையாகஇருந்தனவையே அன்றி மக்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பனவையாகஇருக்கவில்லை.
தற்போது மக்கள் தங்களது கருத்துக்களை, அபிப்பிராயங்களை, மனஉணர்வுகளை, மனக்கிலேசங்களை வெளிப்படுத்த முன்வரு கிறார்கள்.அத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது அதனை இனவாதமாக சித்தரிப்பதற்கு தெற்கத்தையர்கள் முயற்சி க்கிறார்கள்.இன்றைய குறை நிவர்த்தி நடமாடும் சேவையானது மக்களைநாடிவந்து மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு சேவையாகும் என்றார்.
இக்குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராஜா மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்கள் அரச அதிகாரிகள் மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here