புரட்டாதி மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் மாதாந்த நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தில் நேற்று (30.09.2016) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.
ஈகச்சுடரினை 1988 இல் கைதடிப்பகுதியில் இந்திய இராணுவத்தினருடன் நேரடி மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் பரா , 1990 இல் புலோப்பளையில் இந்திய இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவடைந்த லெப்டினன்ட் பக்கி ஆகியோரின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து, நினைவுரை இடம்பெற்றது.
நினைவுரையை பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திருச்சோதி அவர்கள் ஆற்றினார். அவர் தனது உரையில், நாம் அனைவரும் மாவீரர்களின் வழியிலேயே பயணிக்கின்றோம். தொடர்ந்து அவர்களை நெஞ்சில் இருத்தி உத்வேகத்துடன் பயணிப்போம் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.