சிறிலங்கா அரசு தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நேற்று 26.09.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.
ஜெனிவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் முடிவடைந்த பேரணியைத் தொடர்ந்து, அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடர் ஏற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து சுடர்வணக்கம் இடம்பெற்றது.
தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றதையடுத்து, உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் இருந்து கலந்துகொண்ட இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் குறித்த உறுதிப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
தமிழின உணர்வாளர்களின் கவிதை, சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டு பிரமுகர்களின் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தது.பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளி பயணத்தை மேற்கொண்ட உணர்வாளர்களும் அரங்கில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக்குரலை எழுப்பியிருந்தனர்.
செயற்பாட்டாளர் கஜன் அவர்களும் தனது தமிழன அழிப்புக் கண்காட்சியை புதிய ஒளிப்படங்களுடன் சற்று வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வின் நிறைவாக பிரகடனம் வாசிக்கப்பட்டது. தேசியக்கொடி இறக்கப்பட்டதும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.

ஜெனிவா தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் முடிவடைந்த பேரணியைத் தொடர்ந்து, அங்கு கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றதையடுத்து, உறுதிப்பிரமாணம் எடுக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் இருந்து கலந்துகொண்ட இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் குறித்த உறுதிப்பிரமாணத்தை மேற்கொண்டனர்.
தமிழின உணர்வாளர்களின் கவிதை, சிறப்புரைகள் இடம்பெற்றதுடன், வெளிநாட்டு பிரமுகர்களின் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளில் பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தது.பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளி பயணத்தை மேற்கொண்ட உணர்வாளர்களும் அரங்கில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக்குரலை எழுப்பியிருந்தனர்.

செயற்பாட்டாளர் கஜன் அவர்களும் தனது தமிழன அழிப்புக் கண்காட்சியை புதிய ஒளிப்படங்களுடன் சற்று வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வின் நிறைவாக பிரகடனம் வாசிக்கப்பட்டது. தேசியக்கொடி இறக்கப்பட்டதும், நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுகண்டன.

(எரிமலைக்காக ஜெனிவாவில் இருந்து படங்கள்: நிக்சன், ரிலக்சன், காந்தன், ஊடகன் – ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.)