தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாக \\\\\\\’எழுக தமிழ்” மக்கள் எழுச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் \\\\\\\’எழுக தமிழ்” மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் நேற்றைய தினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.முற்றவெளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தமிழ் மக்களாகிய நாம் முக்கியமான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். இக் காலகட்டத்தின் முக்கியத்துவத்தை சரியாக விளங்கிக்கொள்ள வேணடும். 2, 3 மாதங்களில் எமது பேரை பயன்படுத்தி அரசிய லமைப்பு கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கு காரணம், ஒரு கொடூர யுத்தத்தை நடத்தி பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறி ஒரு இனத்தை அழித்து அந்த இனத்துக்க உரிய தீர்வை கொடுப்போம் என உலகிற்கு வாக்குறுதி கொடுத்த நிலையில்தான் இன்று இரகசியமாக அரசியல் அமைப்பு தயாரிக்கப்படுகிறது.
ஏனைய நாடுகளில் அரசியல் அமைப்பு என்பது மக்களுடன் பேசி மக்களின் கருத்தை உள்வாங்கி அரசியலமைப்பு உருவாக்கப்படும் அத்துடன் நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும். ஆனால் இன்று 65 வருடங்களுக்கு மேல் பல தியாகங்கள் செய்து இரத் தம் சிந்தி அழிந்து போய் உள்ள மக்களுக்கு நீதி கொடுப்பதாக கூறி கொண்டுவரப்போகும் அரசியல் அமைப்பில் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படப்போகிறதென்பது கேள்விக் குறியாகவுள்ளது.
அப்படி இருக்க காரணம் எமது அபிலாசைகள் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்பட கூடியதாக இருந்தால் ஏன் இரகசியமாக மேற்கொள்ளவேண்டும்.
65 வருடங்களாக எமது அபிலாசைகள் பற்றி கூறியுள்ளோம். ஆனால் அதற்கு மாறாக இன்று சிங்கள தலைவர்கள் ஒற்றயாட்சி தீர்வு வழங்கப்படும் என கூறி வருகிறார்கள்.
ஒரு கொடூரயுத்தம் நடத்தி இனத்தை அழித்து நீதி கேட்கும் இனத்தின் முதுகெலும்பை உடைத்து எம்மை அமைதியாக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் இப்பேரணி ஊடாக மிகத்தெளிவான பதிலை இன்று கூறியுள்ளோம்.
அரசியல் அமைப்பில் எமது அபிலாசைகள் பூர்த்தி செய்யாவிட்டால் இப்பேரணி வளரும் தமிழ் தாயகத்தில் உள்ள ஒவ்வொரு இடத்துக்கும் செல்லும் என வெற்றிகரமாக தெரிவித்துள்ளோம். இப்பேரணி தமிழ் தேசத்தின் எதிர்காலத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத் தக்கூடிய சக்தியாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் இந்த இனம் நீதி கேட்கவும் அபிலாசைகளை நிறைவேற்றவும் அரசியல் தலைவர்களை நம்பியிருக்காத இனம் என தனது பலத்தை காட்டி வெற்றி பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.