தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்கும் வரை தமிழர் தேசம் எங்கும் \\\\\\\’எழுக தமிழ்” வீறுகொண்டெழும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புர ட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் \\\\\\\’எழுக தமிழ்” மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் நேற்றைய தினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. முற்றவெளியில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த மக்கள் எழுச்சி பேரணியை குழப்புவதற்கு பல தரப்பினர் முயற்சி செய்தனர். அவை எல்லாவற்றை மீறி நாம் இப்பேரணியை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம். இப் பேரணியை கேலியாக பார்த்தவர்களுக்கு எவ்வாறான பேரணியை தமிழ் மக்கள் பேரவை நடத்தியுள்ளது என தற்போது தெரிந்திரு க்கும்.
இந்த மக்கள் எழுச்சியில் நாம் கூறும் செய்தி இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், இன நல்லிணக்க குழுவினுடைய தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் எதிர்க் கட்சித்தலைவர் சம்பந்தனுடைய காதுகளுக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் என்ன கோரிக்கையை முன்வைத்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
2006 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரன் தலைமையில் பொங்குதமிழ் நடத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின்; தலைமையில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழை பிரகடனப்படுத்தியுள்ளது.
எனவே எப்போதும் தமிழ் மக்கள் தோற்றுப்போனவர்கள் அல்ல. தமிழ் மக்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் மக்களின் நிலங்களை கபளிகரம் செய்ய முடியாது, தமிழரின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் என்பவற்றை அழிக்கமுடியாது. இவைக்கெதிராக நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் ஒன்று கூடிவந்துள்ளார்கள்.
ஆகவே அமையப்போகும் அரசியல் சாசனம் என்பது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மக்களுடைய இறையாண்மை தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்ட ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு முறையிலான அரசியல் சாசனமாக அமைய வேண்டும்.
எமது கோரிக்கைகளை ஐ.நா மனித உரிமை ஆணையகம்,ஐ.நா பொது சபை, புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் கேட்க வேண்டும். இப்பேரணி ஒரு ஆரம்பம் மாத்திரமே. தொடர்ச்சியாக தமிழருடைய தேசங்கள் எங்கும் \\\\\\\’எழுக தமிழ்” வீறுகொண்டெழும் அப் போது தமிழ் மக்களின் உரிமைகள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.