தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி சுவிஸ் ஜெனீவாவை நோக்கி ஐந்தாம் நாளாக நகரும் ஈருருளிப் பயணம்!

0
247

தமிழினப் படு கொலைக்கு நீதி வேண்டி சுவிஸ் ஜெனீவாவை நோக்கி நகரும் ஈருருளிப் பயணம் பிரான்ஸ் நாட்டின் சார்யூனியன், பால்ஸ்பூர்க், சவேர்ன் என்ற இடங்களைக் கடந்து  இன்றைய தினம் ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடைந்துள்ளது.

தொடர்ந்து  ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டு வருபவர்கள் மாநகர முதல்வர்களையும், பிரஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தமிழினப் படு கொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் தமிழின ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல்கள் இடம் பெறுவதால், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டுமெனவும், செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு பிரான்ஸ் நாடு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனவும், தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தனித் தமிழீழம் தான் என்பதையும் வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது.

அவருடன் தொடர்ந்து உரையாடுகையில் அவர் கூறியதாவது பிரான்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடம் தானும் தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கையை முன்வைக்க இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து ஸ்ராஸ்பூர்க் நகரின் வெளிநாட்டு வெளிவிவிகார பிரதிநிதி அவர்களைச் சந்தித்து மனு கையளிக்கப்பட்டதுடன், அவருடன் கலந்து உரையாடியும் இருந்தனர்.

இவ் வேளை பிரான்ஸ் நாட்டின்  ஊடகங்களும் இவ் ஈருருளிப் பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி பிரசுரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

20160918_093732 20160918_164225 20160918_164358

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here