கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வாருங்கள்.
கர்நாடக இனவெறி அரசு தமிழர்களின் காவிரி நீர் உரிமையை சட்டவிரோதமாக தடுக்கிறது. தமிழர்களை மிருகத்தனமாக தாக்குகிறது. தமிழர்களின் சொத்துக்களை சூறையாடுகிறது. நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட வன்முறை. பெங்களூரில் 1990களில் நடந்ததைப் போன்றும், ஈழத்தில் 70-80களில் நடந்ததைப் போன்றும், 2001இல் குஜராத்தில் நடந்ததைப் போன்றதுமான திட்டமிடப்பட்ட தாக்குதல்.
நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் போன்றவற்றை தஞ்சை டெல்டா பகுதியிலிருந்து எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து அந்த பகுதியினை பாலைவனமாக்குவது இந்திய அரசின் சதித் திட்டம். தமிழரின் சொத்துக்களை திருடும் ONGC, NLC , ரிலையன்ஸ் நிறுவனங்களை தமிழகத்திலிருந்து விரட்டுவோம்.
தமிழர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு தடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை. தமிழ்க் குடும்பங்கள் சீரழிவதை இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறோமா?
நமது ஒற்றுமையே கர்நாடக தமிழனுக்கு பாதுகாப்பைக் கொடுக்கும். நம் மக்கள் தாக்கப்படுவதைத் தடுக்க ஒருநாள் ஒற்றுமையாய் ஒன்று கூட மாட்டோமா!
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை நமது குழந்தைகளின் எதிர்காலப் பிரச்சினை.
அனைவரும் குடும்பத்துடனும், குழந்தைகளுடன் வாருங்கள். காவிரி நீரின் மீதான நமது உரிமையை நிலை நாட்டுவோம்.
சர்வதேச நதிநீர் பங்கீட்டு சட்டங்களின் படி நமது நீருக்கான உரிமையினைக் கோருவோம்.
செப்டம்பர் 18, ஞாயிறு, மாலை 4 மணியளவில், தமிழர் கடல்(மெரீனா கடற்கரை), கண்ணகி சிலை அருகில்.
-மே பதினேழு இயக்கம் – 9884072010