தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷின் உடல் மன்னார்குடியில் காந்தி நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் வைகோ, சீமான், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.காவிரி பிரச்சனைக்காக தீக்குளித்து உயிரிழந்த நாம் தமிழர் கட்சி தொண்டர் விக்னேஷின் உடல் மன்னார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சொந்த வீட்டில் வைக்கப்பட்ட விக்னேஷின் உடலுக்கு கட்சியின் கொடி போர்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியினர் சிலர் முற்பட்டனர். அதற்கு உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் தாயாரும் கொடியை போர்த்த மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விக்னேஷ் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியிலும் வைகோ, சீமான், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்ட எஸ்பி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் உடல் மன்னார்குடியில் உள்ள காந்திநகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.