தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவேந்தல் ஆரம்பம்!

0
269
11681தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக சாகும்வரை உண்ணா விரதம் இருந்து தியாக தீபமான தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தின வாரம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
அவரது நினைவை முன்னிட்டு நேற்று தொடக்கம் தாயகத் திலும் புலம்பெயர் தேசங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
தாயகத்தில் திலீபனின் நினைவு தின நிகழ்வுகள் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால்  நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் சுடர் ஏற்றி அஞ்சலிமுன்னெடுக்கப்பட்டுள்ளது.thilip
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய அமைதி  காக்கும் படையினர் இலங்கைக்கு வந்திருந்த வேளை 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி திலீபன் நல்லூர் வீதியில் நீராகாரம் இன்றிய தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்திருந்தார்.
‘மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
சிறைக்கூடங்களிலும் படை முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக்களையப்பட வேண்டும்.
arjonthai
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்” என்ற 5 அம்சக் கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து அவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபன் 12 நாட்கள் தொடர்ச்சியாக நீராகாரம் எதுவுமின்றி உண்ணாவிரதம் இருந்து செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் வீரச்சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here