சாவிலும் சரித்திரம் உண்டு
அதிலும் உன் புகழ் என்று மறையும்
பசியிலும் வரண்ட …
தொண்டையில் இருந்து
ஒலித்த நாதம் சுதந்திர தாகம்
ஒரு வேளை பசித்திருந்தால்
அழுது துடித்திடுவாள் தாய்
உன் பசி அறிய தமிழ் தாய்
மறந்தாளோ?
சுதந்திரம் கேட்டாயோ
பசிக்கு உணவாக
காந்தியம் தோற்றது உன்
காலடியில்
இந்தியம் மௌனித்தது
உன் விடாப்பிடியில்
நீ பசித்திருந்த நாட்களை
நானும் பங்கு கேட்கிறேன்
உன் தியாகம்
எனக்கும் கொடு
இந்திய துரோக வரலாறிகளில் பார்த்தீபன் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தியாகங்கள் இந்த மண் சுமந்து கொண்டுதான் இருக்கிறது. காந்தியத்தின் போலி அகிம்சை ஒழித்து உரு உண்ணத போராட்டத்தின் மறு உருவாய் எங்கள் பார்த்தீபன். நல்லூரின் தங்க மகனே நல்லூர் வீதிகள் கூறுமடா உன் வரலாறு.
பவித்ரா நந்தகுமார்