யாழ். நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை வானில் வந்தவர்களால் மூவர் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகிய பின்னர் வெளியில் வரும்போதே வெள்ளை வானில் வந்தவர்கள், குறித்த மூவரையும் பிடித்து இழுத்து வானுக்குள் தள்ளி, ஏற்றிக்கொண்டு சென்றனர்.
வித்தியா படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு, யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறும் போதே, வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை மட்டும் பிடித்து இழுத்து வெள்ளை வானுக்குள் ஏற்றிக் கொண்டு, தலைமறைவாகினர்.