
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட போர்முனையின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக இருந்து மரணமடைந்த கெங்காதரன் எனும் லெப் கேணல் கலையழகனின் மனைவி விடுதலைப்புலிகள் அமைப்பில் ஏழு வருடங்கள் இருந்ததாகவும், கலையழ கன் பயன்படுத்திய கைத்துப்பாக்கியைப் தற்போதும் வைத்திருப்பதாகவும், புலம்பெயர் தமிழர் களுடன் தொடர்புகளை பேணுவதாகவும் கூறி அவரை பல தடவைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவரது கிளிநொச்சி விநாயகபுரம் வீட்டுக்குச் சென்ற பயங் கரவாத தடுப்பு பிரிவினர் நாளை 15 ஆம் திகதி கொழும்பு இரண்டாம் மாடிக்கு வாக்குமூலம் ஒன்று அளிப்பதற் காக வருகை தருமாறு அழைப்பாணை வழங்கியுள்ளனர்.