இருவேறு உந்துருளி விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

0
235
acciமன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தவராஜா நிரோசன் (வயது 20) என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்   என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
யாழ்ப்பாணத்திலிருந்து குறித்த நபர் மன்னாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் யாழ் நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மன்னாரில் இருந்து யாழ் பிரதான வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்தபோது நாயாத்து வழி பிரதான வீதியில் உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் நீண்ட தூரம் ஓடிய நிலையில் இளைஞன் உந்துருளியில் இருந்து தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த இளைஞன் முச்சக்கர வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரழந்துள்ளார்.
மேலும், சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின்  மாங்குளம் – மல்லாவி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளத்தில் உள்ள பாடசாலைக்கு உந்துருளியில் மகனை விடுவதற்காக வந்தவேளை வீதியின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில் உந்துருளி மோதியே குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 4ஆம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான 38 வயதுடைய இரவிக்குமார் இன்பமலர் ஆவார்.

உயிரிழந்தவரின் மகனான 14 வயதுடைய இரவிக்குமார் சங்கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியாவில் இருந்து அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here