கல்முனையிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம்!

0
222

earthquake-joltsஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் கல்முனையில் நேற்று இரவு 9.00 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதில்  வீடுகளுக்கும் கட்டிடங்களுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டதுடன் நிலங்களிலும் சிறு,சிறு வெடிப்புக்களையும் காணக் கூடியதாக இருந்தது.

இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சிறிது நேரத்தில் பொலிஸாரும் அப்பகுதிக்கு வந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

இதேவேளை, பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் நேற்று 6.1 ரிக்ட்ர் அளவில்  பயங்கர நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் இரவிரவாக வீதிகளில் தஞ்சமடைந்து இருந்தன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here