மாணவிகள் மீது நேற்றும் அடக்குமுறை! மல்லாகம் நீதவானின் தலையீட்டால் நிலைமை கட்டுக்குள்!

0
236

imageஉடுவில் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போதைய அதிபரின் பதவிக்காலத்தை நீடித்து அவரையே தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்த வலியுறுத்தியும் அப் பாட சாலை மாணவிகளால் கடந்த ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டம் யாழ்.மல்லா கம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேரடியாக தலையீட்டதையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள் ளது.
எனினும் நேற்றைய தினமும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி களை அச்சுறுத்திய சம்பவங்கள் பதி வாகியுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பா ணம் வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கும் மேற்படி விட யம் பெற்றோர் மற்றும் பழைய மாணவிக ளால் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபராக ஷிராணி மில்ஸ் என்பவர் தற்போதுவரை கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் அவர் அறுபது வயதை அண்மையில் பூர்த்தி செய் திருந்த நிலையில் அவரை சேவையில் இரு ந்து ஒய்வுபடுத்தி புதிய அதிபரை நியமிப்பதற் கான நடவடிக்கையை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தது.

இருந்த போதிலும் குறித்த பாடசாலையின் மாணவிகள் நிர்வாகத்தின் மேற்படியான தீர்மானத்திற்கு எதிர்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக இப் பாடசாலையில் கடந்த காலங்க ளில் பணியாற்றிய அதிபர்கள் அறுபது வயதை தாண்டியும் சேவையில் ஈடுபட்டிருந்ததாக வும் அவ்வாறிருக்கையில் குறித்த அதிபரை மாத்திரம் நிர்வாகம் திட்டமிட்டு மாற்றுவதா கவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

அத்துடன் குறித்த அதிபரை மாணவர் கள் சந்திக்க கூடாது என்பதற்காகவே கடந்த 5ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த போதும் பின்னர் 8ஆம் திக தியாக நிர்வாகம் மாற்றியிருந்ததாகவும் மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம்சாட் டியிருந்தனர்.

இந்நிலையில் தற்போதைய அதிபரையே தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தியிருந்து டன் இதனை நடைமுறைப்படுத்த கோரி கடந்த சனிக்கிழமை தொடக்கம் கவனயீர்ப்பு போரா ட்டத்திலும் உண்ணாவிரத போராட்ட த்தி லும் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த மாணவர்களது போராட்டம் தொடர்பாக வலிகாம வலய கல்விப் பணிப்பா ளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வியமைச்சரின் செயலா ளர் ஆகியோர் தலையிட்டும் இறுதிவரை மாண வர்கள் தமது கோரிக்கையில் இருந்து பின் வாங்காது தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடு பட்டிருந்தனர்.

இருந்த போதிலும் நிர்வாகம் நேற்றுமுன் தினம் மாணவர்களது எதிர்ப்பையும் மீறி புதிய அதிபரை நியமித்திருந்தது. இதனைய டுத்து நேற்று முன்தினம் பாடசாலை நிர்வா கத்திற்கும் மாணவர்களுக்குமிடையில் முர ண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதன்போது அங்கு வந்திருந்த ஆசிரியர் மற்றும் மதபோதகர் எனக்குறிப்பிடப்படும் ஒருவரால் மாணவிகள் கடுமையாக தாக்கப் பட்டிருந்தனர். இதனையடுத்து அங்கு வந்தி ருந்த யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் ஸ்ரெனிஸ்லஸ் மற்றும் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநா தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நிலை மையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முய ன்றிருந்த போதும் தொடர்ந்தும் மாணவர் கள் மற்றும் நிர்வாகத்திற்கிடையிலான போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது.

தொடர்ச்சியாக இடம்பெற்ற பிரச்சினையா னது நேற்றைய தினம் மீளவும் பாடசாலை ஆரம்பமாகிய போது புதிய அதிபருக்கும் மாணவிகளுக்குமிடையிலான முரண்பாடாக மாறியிருந்தது.
காலை கூட்டத்தின் போது மாணவிகளை புதிய அதிபர் உட்பட மதபோதகர்கள் அச்சுறு த்தியதாகத் தெரிவித்து மாணவிகள் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டவாறு வெளியே ஓடிவந்திருந்தனர்.

இதனையடுத்து பாடசாலை காவலாளிகள், மாணவி;களை வெளியே விடாது பிரதான வாயில்களை அடைத்திரு ந்தனர். இருந்த போதிலும் சில மாணவி;கள் வலுக்கட்டாயமாக வெளியே ஒடிவந்திருந்தனர்.
இதன்காரணமாக குழப்பமடைந்த பெற் றோர்கள்; சம்பவம் தொடர்பாக யாழ்.மல்லா கம் நீதிவான் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததுடன் பாடசாலை ஆசிரி யர்களும் மதபோதகர்களும் தம் பிள்ளைகளை தாக்கியமை,அச்சுறுத்தியமை தொடர்பாகவும் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்திரு ந்தனர்.

இதனையடுத்து மாணவிகளை மீளவும் பாடசாலைக்கு செல்லுமாறும் இது தொடர்பாக தாம் பாடசாலைக்கு வருகை தந்து நிர்வாகத் துடன் பேசுவதாகவும் நீதவான் தெரிவித்திரு ந்தார். இதன்பிரகாரம் மீண்டும் பாடசாலை க்கு வந்திருந்த மாணவி;களை பாடசாலை யின் உள்ளே இருந்த பொலிஸாரும் பாடசாலை காவலாளிகளும் சேர்ந்து உள்ளே செல்ல விடாது பிரதான வாயிலை முடியிருந்தனர்.
இதன்போது நீதவானது உத்தரவை மாணவிகளும் பெற்றோர்களும் கூறியிரு ந்த போதும் பாடசாலை காவலாளிகளும் பொலிஸாரும் அதனை கண்டுகொள்ளாது இருந்தனர். இதனையடுத்து வாயிலின் முன்பே மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர் பாக நிலைமைகளை ஆராயும் பொருட்டு வடக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிநிதி பாடசாலைக்கு வந்திருந்த போதும் பொலிஸார் குறித்த பிரதிநிதியை உட்செல்வதற்கு அனு மதித்திருக்கவில்லை. மாறாக பாடசாலை முடிவடைந்த பின்பே யார் வேண்டும் என் றாலும் உட்செல்ல முடியும் என தெரிவித்து அவரை உட்செல்வதற்கான அனுமதியை மறுத்திருந்தனர். குறித்த பொலிஸ் அதிகாரிக ளுடன் நீண்ட நேரமாக முதலமைச்சின் பிரதி நிதி பேசியிருந்த போதும் அவரை உட் செல்ல பொலிஸார் அனுமதித்திருக்கவில்லை.

மாணவிகளை வெளியே வரவிடாது பாடசாலையின் ஆசிரியர்களும் மதபோதகர்க ளும் தாக்குவதாகவும் அச்சுறுத்துவதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்வதற்காக மனி தவுரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் பாடசாலைக்கு வந்திருந்தனர்.

அவர்களையும் உட்செல்ல முதலில் அனுமதித்திராத நிலையில் பின்னர் சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சரது அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பட்ட அனுமதியையடுத்து உட்செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாடசாலைக்கு நேரடியாக வந்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், பாடசாலை மாணவி;கள், நிர்வா கத்தினர்; ஆகியோருடன் சுமார் இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட நேர கல ந்துரையாடலில் ஈடுபட்டார். இந்நிலையில் குறித்த பாடசாலையின் பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக நீதவான் அறி வித்தார்.

மேலும் தற்போதைய அதிபர் தாமாகவே பதவியில் இருந்து ஒய்வு பெறுவதாக தெரி வித்திருப்பதாகவும் புதிய அதிபர் எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து தனது கடமை களை பொறுப்பேற்க இணக்கம் காணப்பட்ட தாக தெரிவித்த நீதவான், பாடசாலை புனித மான ஒர் இடம் அங்கு புனிதத்தை பாதிக்கி ன்ற விதத்தில் போராட்டங்களில் ஈடுபடுவது நல்லதல்ல எனவும்அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here