மின்சாரம் தாக்கியதில் குடும் பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கொக்குவில் சந்திப் பகுதியில்இடம் பெற்றுள்ளது.
இதில் மானிப்பாயை சேர்ந்த அன்ரனி சஜி(வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.
கொக்குவில் சந்திப் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் மின்சார திருத்த வேலை மேற்கொண்டிருந்த போதே மேற்படி விபரீதம் இடம்பெற்றுள்ளது.
சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.