வாகனத்தின் பக்க கண்ணாடி மோதியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்
இதனையடுத்து குறித்த விபத்தை ஏற்படுத்திய சாரதியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்
மேற்படி விபத்தில் கோண்டாவில் கிழக்கு பழனி கோவிலடியை சேர்ந்த சின்னத்துரை கணேசமூர்த்தி (வயது 60) என்பவரே உயிரிழந்தவராவார்.
பிரஸ்தாப குடும்பஸ்தர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் இருந்து இருபாலை நோக்கி சென் றுள்ளார். அதே பக்கமாக ஐஸ்கிறீமை ஏற்றி செல்லும் கூலர் வாகனமும் சென்றுள்ளது.
பயணத்தின் ஒரு கட்டத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்றவருடைய தலையின் பின் பக்கமாக வாகனத்தின் பக்க கண்ணாடி மோதியுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த குடும்பஸ்தரை மோதியவரே உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார்.
காயமடைந்த குடும்பஸ்தருக்கு மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் குறித்த நபர் யாழ்.போதனாவைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இதனையடுத்து கோப்பாய் பொலிஸாரால் குறித்த விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டு யாழ் நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது நீதவான் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.