காணாமல் போனோர் தொடர்பில் பான் கீ மூன் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் !

0
381

vaikoஇலங்­கையில் காணாமல் போன தமி­ழர்கள் தொடர்பில் ஐ.நா. செஞ்­சி­லுவைச் சங்கம் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என்று வைகோ தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,
ஐ.நா.வின் பொதுச்­செ­ய­லாளர் பான் கீ மூன் கொழும்­புக்குச் செல்­கிறார். முன்னர் இவர் அங்கே சென்­ற­போது என்ன ஏமாற்று வேலை­களைச் செய்­தார்­களோ, அதைத்தான் இப்­போதும் செய்யப்போகின்­றார்கள்.
சிங்­கள அரசின் மோசடி நாட­கத்­திற்குத் துணை­போ­காமல், இனப்­ப­டு­கொ­லைக்கு சர்­வ­தேச நீதி விசா­ரணை நடை­பெ­று­வ­தற்கும், காணாமல் போன­வர்கள் குறித்துத் தக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் ஏற்ற வகையில் பான் கீ மூன் செயற்­பட வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்றேன்.
இலங்கை அரசின் மோசடி நாட­கத்­திற்குத் துணை­போ­காமல், இனப்­ப­டு­கொ­லைக்கு சர்­வ­தேச நீதி விசா­ரணை நடை­பெ­று­வ­தற்கும் காணாமல் போன­வர்கள் குறித்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கும் ஐ.நா. மன்றம், செஞ்­சி­லுவைச் சங்கம் ஆகி­யன நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.
உலகின் பல நாடு­களில் பேரி­ன­வாத அர­சு­க­ளாலும், அடக்­கு­முறை சர்­வா­தி­கா­ரத்­தாலும் படு­கொ­லைகள் நடை­பெற்ற காலங்­களில் காணாமல் போன­வர்கள் கதி என்ன? இர­க­சிய சிறை­களில் சித்­தி­ர­வதை செய்­யப்­ப­டு­கின்­றார்­களா அல்­லது கொல்­லப்­பட்டு விட்­டார்­களா? என்­பதை அறிந்து கொள்ள முடி­யாமல் உற்றார் உற­வி­னர்­களும், பாதிக்­கப்­பட்ட இன மக்­களும் எழுப்­பிய ஓலக்­குரல் மனித உரிமை ஆர்­வ­லர்­களின் மன­சாட்­சியைத் தட்­டி­யதால், இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் அரசு சாரா அமைப்­பு­களால் அறி­விக்­கப்­பட்­ட­துதான் ஆகஸ்ட் 30 ‘காணாமல் போனோர் நாள்’.
இனப்­ப­டு­கொ­லைக்கும், இன அழிப்புக் கொடு­மைக்கும் உள்­ளா­கிய பகு­தி­களில் காணாமல் போன­வர்கள் குறித்த உண்­மை­களைக் கண்­ட­றிய வேண்­டி­யது, மனித உரி­மைகள் ஆணை­யரின் பொறுப்பு ஆகும்.
அது­போ­லவே செஞ்­சி­லுவைச் சங்­கமும் இதில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றது. 189 நாடு­களில் இயங்­கு­கின்ற அவர்­கள்தான், செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்ட இடங்­க­ளுக்கு உள்­ளேயும் சென்று தக­வல்­களைச் சேக­ரித்துத் தரு­கின்­றார்கள். அதற்குரிய அனு­ம­தியை ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யகம் வழங்கி இருக்­கின்­றது.
இலங்­கைத்­தீவில் சிங்­கள இன­வாத அர­சுக்கும், தமிழ் ஈழ விடு­தலைப்புலிகள் இயக்­கத்­திற்கும் இடையே போர் மூண்­டது. இதில் விடு­தலைப் புலிகள் உள்­ளிட்ட ஒன்­றரை இலட்சம் தமி­ழர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி ஐ.நா. மன்­றத்தின் பொதுச்­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் 47/133 இன்­படி, காணாமல் போனோர் குறித்து உண்­மையைக் கண்­ட­றி­யவும், அவர்­களைப் பாது­காக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
மனித உரி­மை­களை அழித்து, சிறைச்­சா­லை­களில் இரக­சி­ய­மாக அடைத்து வைக்­கின்ற கொடுமை 30 நாடு­களில் நடை­பெற்று வரு­வ­தாக, ஐ.நா. மன்றம் தகவல் சேக­ரித்து உள்­ளது.
2009 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்­களில் சிங்­கள இன­வாத அரசு நடத்­திய தமிழ் இன அழிப்புப் போரின் இறு­திக்­கட்­டத்தில் ஆயுதம் ஏந்­தாத அப்­பாவித் தமி­ழர்கள், தாய்­மார், முதி­யோர்கள், குழந்­தைகள் உட்­பட ஒன்­றரை இலட்சம் பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர் என்ற உண்­மையை, ஐ.நா. பொதுச் செய­லாளர் அமைத்த தருஸ்மன் தலை­மை­யி­லான மூவர் குழு, ஆதார சாட்­சி­யங்­க­ளோடு அறிக்­கை­யாகத் தந்­தது.
கவி­ஞர்கள், படைப்­பா­ளிகள், கலை­ஞர்கள், விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஈழத்­த­மி­ழர்­களைக் காண­வில்லை. அவர்கள் கொல்­லப்­பட்­டார்­களா? வதை முகாம்­களில் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாகி உள்­ள­னரா? உண்மை வெளி­வர வேண்டும். இரக­சியச் சிறை­களில் இருப்போர் விடு­த­லை­யாக வேண்டும் என்று தொடர்ந்து தமிழ் இனக்கொலைக்கு நீதி கேட்கும் நாம் கோரி வரு­கின்றோம்.
தமிழ் ஈழ செய்தித்தொடர்­பாளர் இசைக்­க­லைஞர் எனச் செயற்­பட்ட தமிழ் நங்கை இசைப்­பி­ரியா கைது செய்­யப்­பட்­ட­தாக இலங்கை அரசு 2009 ஆம் ஆண்டு செய்தி வெளி­யிட்­டது. ஆனால் அவர் கொடூ­ர­மான பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டுக் கொல்­லப்­பட்ட படங்கள், சேனல்– 4 தொலைக்­காட்­சியின் மூலம் உல­குக்குத் தெரியவந்­தது. அவர் ஆடை எதுவும் இன்றித் துடிக்கும் காட்­சிக்கு அரு­கி­லேயே நூற்­றுக்­க­ணக்­கான ஈழத்­தமிழ் இளை­ஞர்­களும் ஒரு குளக்­க­ரையில் நிர்வாணமாக உட்­கார வைக்­கப்­பட்டு இருக்கும் காட்­சியும் வெளி­யா­னது. இறுதிப் போரின் போது காணாமல் போன­வர்கள் என்று அறி­விக்­கப்­பட்ட போராளி இயக்­கத்தின் முக்­கிய தலைவர் பால­குமார், நலிந்த நிலையில் தன் மக­னுடன் ஒரு மரக்­கட்­டையில் இரா­ணுவம் சூழ அமர்ந்து இருக்கும் காட்­சியும் படங்­க­ளாக வந்­தன. கவிஞர் புதுவை இரத்­தி­ன­துரை, விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கியத் தலை­வர்­க­ளான யோகி, பேபி சுப்­பி­ர­ம­ணியம் என்ற இளங்­கு­மரன், அர­சியல் செயற்­பாட்­டாளர் எழிலன் ஆகியோர் மக்கள் முன்­னி­லையில் இலங்கை இரா­ணு­வத்தால் கைது செய்­யப்­பட்­டனர்.
ஏழு ஆண்­டுகள் கடந்தும் அவர்கள் குறித்து எந்தத் தக­வலும் இல்லை. மக்கள் முன்­னி­லையில் கைது செய்­யப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­களின் செயற்­பாட்­டாளர் சசி­த­ரனின் துணை­வியார் வடக்கு மாகாண உறுப்­பினர் ஆனந்தி, தன் கண் முன்­னா­லேயே நடந்த கொடு­மையைச் சுட்­டிக்­காட்டி ஏழு ஆண்­டு­கா­ல­மாக நீதி கேட்டுப் போரா­டு­கிறார்.
உலக நாடு­களின் கண்­களில் மண்ணைத் தூவு­வ­தற்­காக, மைத்­தி­ரி­பால சிறி­சேன, சந்­தி­ரிகா, ரணில் ஆகிய மூவர் சதிக்­குழு காணாமல் போனோர் குறித்து அவ்­வப்­போது பொய் அறிக்­கை­களைத் தந்து வரு­கின்­றது. காணாமல் போனோர் குறித்து முன்பு ராஜ­பக் ஷ ஒரு ஆணை­யத்தை அறி­வித்­தது போலவே, இப்­போ­தைய அரசும் ஏமாற்றி வரு­கின்­றது.
பல இடங்­களில் இரக­சி­ய­மாக சிறை வைக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு, ஊசி
மருந்­துகள் மூலமும், உண­வு­க­ளிலும் சிறிது சிறி­தாகக் கொல்லும் நஞ்சு ஊட்­டப்­பட்டு, இது­வரை 107 பேர் உயிர் இழந்­தி­ருக்­கின்­றார்கள். பல இடங்­களில் வெளியே தெரி­யாமல் வதை முகாம்­களில் வைக்­கப்­பட்டுத் துன்­பு­றுத்­தப்­ப­டு­கின்ற செய்­தியும் வெளி­யாகி இருக்­கின்­றது. உலகில் நாதி­யற்ற இனம் ஈழத்­தமிழ் இனம்தான். 18 மைல் தொலைவில் உள்ள தாய்த் தமி­ழ­கத்தில் கோடா­னு­கோடித் தமி­ழர்கள் வாழ்ந்தும், 18 தமி­ழர்கள் தீக்­கு­ளித்து உயிர்த்­தி­யாகம் செய்­தும்­கூட, 2008-–2009 ஆம் ஆண்­டு­களில் மத்­தியில் ஆட்­சியில் இருந்த ஐக்­கிய முற்­போக்குக் கூட்­டணி அரசு, தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க.வின் நயவஞ்சகமான ஒத்துழைப்புடன் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தி முடித்தது. நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட 107 விடுதலைப்புலிகள் குறித்தும், அத்தகைய உயிர் ஆபத்தில் சிக்கி இருக்கின்ற போரா ளிகள் குறித்தும், காணாமல் போனவர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும், அனைத்துலக அமைப்புகளான ஐ.நா. மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் ஆணை­ய­க­மும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரி­வித்­துள்­ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here