தீர்வு காண்பதற்கான பேச்சுக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயார் என்கிறார் இராஜாங்க செயலாளர் கெரி!

0
214

John-Kerryஇலங்கை மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமை­தி­யான முறையில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமெ­ரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்ளார்.

இலங்­கையில் மனித உரி­மை­க­ளையும், ஜன­நா­ய­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புதி­தாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­திற்கு உத­வு­வ­தற்கு தாம் தயார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தனது இந்­திய விஜ­யத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளி­யிட்­டுள்ளார். இலங்­கை­யு­ட­னான உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­து­வற்­காக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ள கெரி, அதற்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் அமை­தி­யான தேர்­தலை வலி­யு­றுத்தி மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வு­டனும் தான் உரை­யா­டியதாக குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்கை மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும், அமை­தி­யான முறையில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும், மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்ள அவர், இலங்­கையில் இன்­னமும் பல சவால்கள் உள்­ளன என்றும் எச்­ச­ரித்­துள்ளார்.

மனித உரி­மைகள், நல்­லாட்சி போன்ற விட­யங்­க­ளுக்கு தீர்வை காண்­ப­தற்­கான பேச்­சுக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு நாங்கள் தயார் என உட­ன­டி­யாக தெரி­வித்­துள்­ளோம். இலங்கை மக்­க­ளுக்­கான புதிய அத்தியாயத்தை, புதிய தருணத்தை, புதிய வாய்ப்பை ஏற்படுத்துவதாக இந்த புதிய

அரசு அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here