இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் அழைத்த ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டம் குறித்து பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.
மேலும் இலங்கையின் முன்னேற்ற முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பான் கீ மூன் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன் அங்கிருந்து இலங்கை ஜனாதிபதியை தொலைபேசியில் அழைத்து பேசியதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.