தை திருநாளின் முதல்நாள் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபு. எதற்கும் ஒரு நேரம் காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? எந்த நேரத்தில் பானை வைத்து பொங்கல் வைக்கலாம்? எப்போது படையலிட்டு சூரியபகவானை வழிபடலாம் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
சூரியபகவானைப் போற்றும் பொங்கல் திருநாளைப் பற்றியும், பொங்கல் வைக்க உகந்த நேரம் பற்றியும் ஜோதிடர்கள் கூறியுள்ளதை படியுங்களேன். உலகம் முழுவதும் உள்ள ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். சூரிய பகவான் பருவநிலைமாற்றங்கள் அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம்.
சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம் சூரிய பூஜை தை திருநாளின் முதல்நாளான பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். நம்மை காக்கவே சூரியபகவான் எந்நேரமும் காத்திருக்கிறார்.
நம்முடைய அனைத்து தோஷங்களையும் பாபங்களையும் நீக்கி, நல்வாழ்வு தர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்த குணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள். பொங்கல் பிரசாதம் இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பொங்கச் செய்யவேண்டும்.
பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு.
நல்லநேரம் எது? ஜய வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2015 வியாழன் அன்று பொங்கல் பானைவைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9 மணிவரை சூரிய ஓரையில் பொங்கல் வைத்து வழிபட்டால் ராஜயோகம் கிட்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர ஓரையில் பொங்கல் வைத்தால் தனம், தானியம் பெருகும்.
சூரியனின் ஆசி காலை 11 மணி முதல் 12 வரை சந்திர ஓரையில் பொங்கல், வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்க வேண்டும். அப்போது 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.